அரசாங்கத்திடம் தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு தவிக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை விட கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்துள்ளது. இதன்படி, உலகில் முதன் முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. நெதர்லாந்து நாட்டின் முன்னாள்...
  காசாவில் ஹமாசுக்கு எதிரான இஸ்ரேல் படைகளின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்து இருக்கிறது. அந்தவகையில் தெற்கு காசாவின் பிரதான வைத்தியசாலையான கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலையில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார்.6 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக வைத்தியசாலையில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களும், நோயாளிகளும் வெளியேற தனிப்பாதை ஒன்றை இஸ்ரேல் படைகள் திறந்திருந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து வைத்தியசாலையில் வளாகத்தில்...
  அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக அலாஸ்காபாக்ஸ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அலாஸ்காபாக்ஸ் பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் ஒரு வகை வைரஸ் ஆகும். அவை ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் வகையைச் சேர்ந்தவை என்பதால், தோல் புண்கள் அல்லது தடிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த வகை வைரஸ்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. இவற்றில்...
  கனடாவில் பால்வினை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிபிலிஸ் எனப்படும் பால்வினை நோய் பரவுகை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய பொதுச் சுகாதார அலுவலகத்தின் பிரதானி டொக்டர் திரேசா டேம் இந்த நோய் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் பல நாடுகளைச் போன்றே கனடாவிலும் சிபிலிஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக சுடடிக்காட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நோயாளர் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் சுமார்...
  ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை தொடர்பிலான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை முதல் பனிப்பொழிவு காணப்படும் எனவும் நாள் முழுவதும் இந்த பனிப்பொழிவு நிலமையை அவதானிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக...
  கனடாவில் விமாமொன்றில் அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்திய பெண் ஒருவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானம் பறப்பதற்கு முன்னதாக இந்தப் பெண் அதிக தடவைகள் கழிப்பறையை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜோனா ச்யூ இவ்வாறு விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. மெக்ஸிக்கோவிற்கு புறப்பட்டுச் செல்லவிருந்த விமானத்திலிருந்த குறித்த பெண் எழுத்தாளர் இறக்கிவிடப்பட்டுள்ளார். விமானம் பறப்பதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் கழிப்பறையை பயன்படுத்தியதாகவும், வயிற்றுப்...
  அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் தெரிவித்துள்ளார். அஸ்வெசும முதற்கட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத எந்தவொரு நபர்களும் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்...
  தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறும் பட்சத்தில் நாட்டை ஆள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "ஜே.வி.பி. இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றி வருகின்றது என்பது தற்போது உறுதியாகின்றது. அக்கட்சியினரால் போலிக் கருத்துக்களே சமூகத்தில் விதைக்கப்படுகின்றன. எனவே, உண்மையை சொல்லி நாட்டைப் பொறுப்பேற்குமாறும், பொய்களை நிறுத்துமாறும் நாம்...
  புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 வகையான உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 55 ரூபாவால் குறைக்கப்பட்டு...
  இணுவில் பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறும், கடவை காப்பாளர் பணியில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணுவில் பகுதியில் நேற்று (14.02.2024) மாலை புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் கோரிக்கை இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸாரிடம் அப்பகுதியில் நிரந்தர புகையிரத கடவை காப்பாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...