அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த அடையாளம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதோடு இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள்...
கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் உத்தரவு பெப்ரவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மனித பாவனைக்கு உதவாத தரம்குறைந்த இம்யூனோகுளோபிலின் மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து கடந்த 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது செய்யப்பட்டார்.
இதனடிப்படையில், மாளிகாகந்த நீதிமன்றில் கடந்த 3ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தரமற்ற மருந்து இறக்குமதி
அதன் பின் சுகயீனம் காரணமாக வைத்திய ஆலோசனையின்...
வெரஹெரவில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து இரண்டு தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (15.02.2024) இடம்பெற்றள்ளது.
இதன்போது மோதர பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
குறித்த பொலிஸ் கான்ஸ்டபள் தனது காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக நேற்று (14.02.2024) மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அந்த அலுவலகத்தில் இருந்து தனது...
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர், அண்மைக்காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, சந்தேகநபர், குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் அவரை மருதங்கேணி பொலிஸார் தேடிவந்துள்ளனர்.
மனைவி முறைப்பாடு
அதேவேளை, அவரது...
வவுனியா ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குவதில் எதிர்ப்பு
Thinappuyal News -
அரச காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு காணி வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் பரிந்துரைத்துள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம், தெங்கு அபிவிருத்தி அதிகார சபை, பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம்,...
பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் வட்டவளை பகுதி பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும் அறிவானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என கருதுவதாகவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலை நடத்துவார்...
மூன்று பொலிஸ் அதிகாரிகள், பொது மகன் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்வின் பெரேரா என்ற 81 வயதான நபரிடமே மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
நீதிபதிகள் விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மனுதாரருக்கும் பிரதிவாதி பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மன்னிப்பு கோரியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு, கொட்வின் பெரேரா கொழும்பில்...
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் உள்ளதென அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நேற்று நீதிமன்றில் தகவல் வெளியிடும் போது அவர் இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவருக்கு செயற்கை ஒக்ஸிஜன் வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல
தற்போது சிறைச்சாலையில் இந்த நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சை இல்லை என அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 6...
நாட்டில் தற்போது அரசியல் சூழ்நிலை நன்றாக உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் அதனை அனுபவித்து முடித்துவிட்டேன் என.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் அதை இரத்து செய்தால் நல்லது. இன்று முழு நாடும் அதை ஒழிக்கச் சொல்கிறது.
தேர்தலை ஒத்திவைக்கும் பொறியாக இந்த விடயம் உள்ளதென ஊடகவியலாளர்...
காஸாவில் கடந்த (07.02.2023) முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,576-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.
இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் கடந்த (07.10.2023) முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின்...