புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க “அத தெரண” வினவிய போது பதிலளித்தார். நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்...
நடப்பாண்டு டி20 உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜூன் 1ஆம் முதல் 29 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அணிகள், ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான...
நூருல் ஹுதா உமர் அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த கல்வி விருது விழா எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு லொய்ட்ஸ் மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் புதிதாக அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்களை பாராட்டி கெளரவிப்பதோடு கடந்த காலங்களில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற அதிபர்களும் இவ் விழாவில் கெளரவிக்கப்படவுள்ளனர். அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஜே.எம்.அன்வர் நெளஷாத் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்...
பாறுக் ஷிஹான் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்   வைக்குமாறும் அது  தொடர்பான  வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம்  திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின்...
பாறுக் ஷிஹான் வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட  ஆசிரியர்களை மாத்திரம் அவர்களின் மேன்முறையீட்டுன் பின்னர்   சொந்த மாவட்டத்தினுள்   இடமாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை  மாவட்ட  ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று  பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய  அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,...
நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழக புவியியல் துறை மாணவர்களுக்கு ட்ரோன் கேமரா (Drone Camera) பயன்பாடு மற்றும்  தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு இன்று 2024.02.14 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது. பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பஸில் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த செயலமைவை...
  அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13.2.2024) இடம்பெற்றுள்ளது. அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள்...
  மறு அறிவித்தல் வரைமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவசர கிகிட்சைப்பிரிவு சேவைகளுக்கான கடமைகளில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில், வெளிநோயாளர்களுக்கான மருந்தக உத்தியோகத்தர்களும் கடமையை பகிஷ்கரித்துள்ளதுடன் மருந்தகமும் மூடப்பட்டுள்ளது. நேற்றையதினமும் வைத்தியசாலை ஊழியர்கள் முதற்கட்டமாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.