சிறப்பு அதிரடிப்படை தலைவரான நிமல் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார்.
கட்சிக்கான உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று ( 14.02.2024) பெற்றுக்கொண்டுள்ளார்.
சஜித்துக்கு ஆதரவு
கடந்த சில காலங்களாக சஜித்துக்கு ஆதரவு வழங்கி இருந்த நிலையிலேயே தற்போது கட்சியி்ல் உறுப்பினராக இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள மூன்றாவது பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14.02.2024) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் விளைவு
அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. பாடசாலை...
சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024 மே - ஜூன் மாதங்களிலும், உயர்தரப் பரீட்சை 2024 டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை
இருப்பினும் பரீட்சை நடைபெறும் திகதிகள் மற்றும் கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும்...
கட்சியினை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும், நாமும் நன்மை பெறும் விடயங்களில் நாம் ஈடுபட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை.
(எஸ்.அஷ்ரப்கான்)
கட்சியினை பலப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி நமது சமூகமும்,நாமூம் நன்மை பெறும் விடயங்களில் நாம் ஈடுபட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
சாய்ந்தமருது 21ம் வட்டாரத்தில் அமைந்துள்ள 05,07,08,09,ம் கிராம சேவகர் பிரிவுகளில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கிளைகள்...
பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் குழுவினர் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (14) மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது இன்று அம்பாறை கச்சேரியில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு வருகை தந்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான...
(எஸ்.அஷ்ரப்கான்)
சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதவி பிரதேச செயலாளர் யு.எல்.அஸ்லம்(எல்.எல்.விB) தலைமையில் நேற்று (13) சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
உத்தியோகத்தர்களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் நடைபெறும் இச்சுற்றுபோட்டியில் இம்முறை 8 அணிகள் கலந்து கொண்டதுடன் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இச் சுற்றுப் போட்டிக்கு அதிதிகளாக சம்மாந்துறை...
(எஸ்.அஷ்ரப்கான்)
இந்தியா, திருச்சியில் சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருது - 2023, பெற்ற நீதிக்கான மய்யத்தின் பொருளாளர், இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மய்யத்தினால் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தலைமையில் சாய்ந்தமருது வொலிவேரியன் கலாச்சார மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இதில் நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் உள்ளிட்ட நீதிக்கான...
அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ட்ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன்,...
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று (12) பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி மூழ்கினர்.
மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புஷ்பகுமார...
செவ்வாய்க்கு 10 லட்சம் மக்கள்! எலான் மஸ்க் குடியிருப்பு திட்டம்: சாத்தியங்கள், சவால்கள், எதிர்காலம்!
Thinappuyal News -
எலான் மஸ்க் செவ்வாயில் 10 லட்சம் மக்களை குடியமர்த்தும திட்டத்தை அறிவித்துள்ளார்.
Elon Musk “கேம் பிளான்”
பிப்ரவரி 11ம் திகதி உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், துணிச்சலான தொழில்முனைவோரான எலான் மஸ்க் பிரமிக்க வைக்கும் ஒரு “விளையாட்டு திட்டம்” ஒன்றை வெளியிட்டார்.
அதாவது, செவ்வாய்க்கு 10 லட்சம் மக்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்தார். இதுவரை முழு விவரங்கள் தெளிவாக இல்லை என்றாலும், மனிதர்கள் நிறைந்த செவ்வாய் கிரகத்தின் எதிர்காலத்தை இது...