இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான கடந்த ஒக்டோபர் 7ம் திகதி அன்று தொடங்கிய போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மகன் ஹாசெம் இஸ்மாயில் ஹனியே (Hazem Ismail Haniyeh) இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 வயதான ஹாசெம் ஒரு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் முன்னரே, ஹனியே குடும்பத்தை...
  அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் ஒன்றிற்கு நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. அமெரிக்கா - ஹூஸ்டன் நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் (Lakewood) என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று அமைந்துள்ளது. குறித்த ஆலயம் நகரில், மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நகரில் அமைந்த மிக...
  சார்லஸ் டயானாவின் திருமணத்தால் கவரப்பட்ட ஒரு இந்திய ஜோடி, அவர்களைப்போலவே திருமணம் செய்யும் தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர். இந்திய வம்சாவளியினரான ரவீனாவுக்கும் (29 வயது ) சாஹிலுக்கும் (28 வயது), இளவரசர் வில்லியம், இளவரசி டயானாவைப்போலவே திருமணம் செய்துகொள்ள ஆசை. அதுவும், சார்லசும் டயானாவும் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில், அவர்களைப்போலவே ஆடையலங்காரங்கள் செய்து, அவர்களைப்போலவே திருமணம் செய்துகொள்ள இருவருக்கும் ஆசை. ஆனால், அதெல்லாம் சாத்தியமா எனும் கேள்வி எழலாம். விடயம் என்னவென்றால்,...
  ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 3 கி.மீ முதல் 10 கி.மீ வரையுள்ள 15 பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் 3,63,000 கோழிகள் மற்ற இடங்களுக்கு கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட...
  ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கனடாவிற்கு நாளை (14.02.2024) விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். ஜோர்தான் மன்னரின் கனேடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் விசேடக் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும்...
  இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 4 மாத காலமாக போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
  கனடாவில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் பலியான நிலையில், அந்த விபத்து தொடர்பான பல கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்ப்டன் நகரில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், இந்தியர்கள் மூவர் பலியாகியுள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. அவற்றில் ஒன்றில், ரீத்திக் (Reetik Chhabra, 23), அவரது தம்பியான ரோஹன் (Rohan Chhabra, 22) மற்றும் அவர்களுடைய நண்பரான கௌரவ்...
  தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சிம் அட்டை பதிவு அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு...
  வங்கிக் கணக்குள்ள நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் வர்த்தகம் தொடர்பான (பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள்) QR குறியீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தக் குறியீட்டை வழங்கக் கடமைப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார். விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு டிஜிட்டல் QR குறியீடு மூலம் ஒருங்கிணைந்த...
  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், இன்று (12.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தவறான முடிவெடுத்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த சம்பத்தினை தொடர்ந்து...