வவுனதீவு பகுதியில் யானைகள் கூட்டமாக படையெடுத்து வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைக் கூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, அப்பகுதியில், தற்போது வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் நாசம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அச்சம்
இதனால், வேளாண்மை அறுவடை காலங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் பொதுமக்களும்...
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு முடிவுக்கு கொண்டு வரப்படும்: சிறிநேசன்
Thinappuyal News -
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று(12.02.2024) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பதவி போட்டி
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பதவிக்காக அடிபடாமல் அதனைச் சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு இணக்கமான ஒரு விடயம் எட்டப்பட்டிருக்கின்றது. இதனை எமது ஆதரவாளர்கள் பலருடன்...
மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானத்திற்கு தடைவிதித்து மூதூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த கட்டாணை கட்டளையை மூதூர் மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் (12.02.2024) பிறப்பித்துள்ளது.
குறித்த மன்றத்தின் காணியில் சிலர் அத்துமீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இந்து இளைஞர் மன்றத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மேற்படி வழக்கானது நேற்று நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டாணை
இதன்போது, வழக்காளியினால், தன் சார்பாக...
ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன அல்லது நாடாளுமன்றம் கூறினால் மட்டுமே யுக்திய தேடுதல் வேட்டை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை முழுமையாக ஒழிக்கும் வரையில் தொடர்ந்தும் இந்த யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுக்திய தேடுதல் வேட்டை
மேலும், மூன்று நான்கு பேர் சத்தம் போட்டாலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் யுக்திய...
சிங்கராஜ பாதுகாக்கப்பட்ட வனத்தில் நீர்த்தேக்கங்கள் மற்றும் சாலைகள் அமைத்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பேராணை மனு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பலருக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்து வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்துள்ளது.
விரிவாக்கம்
சிங்கராஜ வனப்பகுதிக்குள் 05 ஹெக்டயர் நிலப்பரப்பில் நீர்த்தேக்கமொன்றை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.
முன்மொழியப்பட்ட...
ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் புதிய சாதனையுடன் ரணில் தேர்தலில் வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டர் என்ற சாதனையுடன் ரணில் ஜனாதிபதி பதவியில் மீண்டும் அமர்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகத் தலைவர்கள்
ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பீடு செய்யக்கூடிய உலகத் தலைவர்கள் எவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,...
வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் (12.02.2024) அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது.
திரும்பிச் சென்ற...
அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
இன்று (13.2.2024) அதிகாலை ஒரு மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 15 ஆம் அஞ்சல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அளுத்கம, மேல் புளியங்குளிம பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி காரில் பயணித்துக்...
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, உயர்வடைந்து வந்த மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக 2 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த கரட், இன்று காலை ஒரு கிலோ 500 ரூபா தொடக்கம் 600 ரூபாவாக குறைந்துள்ளது.
நாட்டில் மரக்கறிகள்...
நற்பிட்டிமுனை Prince College ன் வருடாந்த Graduation Ceremony மற்றும் Concert நிகழ்வுகள்
Thinappuyal News -
பாறுக் ஷிஹான்
நற்பிட்டிமுனை Prince College ன் வருடாந்த Graduation Ceremony மற்றும் Concert நிகழ்வுகள் நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜிஹானா அலீப், சட்டமுதுமாணி ஏ.ஜெ.பர்சாத்,...