போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாணந்துறை வலான பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கி மூவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியமையினால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருவர் கைது இந்த சம்பவத்தினை தொடர்ந்து பாணந்துறை பிரதேச போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர்...
  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் நேர்ந்த விபத்தின்போது அவர் பயணித்த வாகனத்தை வேறு எந்த வாகனமும் முந்திச் செல்லவில்லை என இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தனது கணவருக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு எழுத்துமூலம் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து சனத் நிஷாந்த பயணித்த கார் மீது மோதிய கொள்கலன்...
பாறுக் ஷிஹான் கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம்  இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக    கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (12) மீட்கப்பட்ட இச்சடலம்  மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை  சேர்ந்த கதிரவேல் பத்மராஜ் (வயது 59) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை...
பாறுக் ஷிஹான் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும நலன்புரி நன்மைகளை பொதுமக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் "நலன்புரி நன்மைகள் பிரிவு" இன்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கம் அசுவெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்தவுள்ள நிலையில் கல்முனை பிரதேச செயலக பிரிவிலுள்ள பொதுமக்களின் நன்மை கருதியே இதற்கான தனியான பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர்,...
  வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். பகல் வேளையில் குழந்தைகள் விளையாடும் போது அதற்கு உகந்த இடத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை தண்ணீர் மற்றும் திரவங்களை முறையாக குடிக்க அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றும்...
  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (2024.02.12) பொதுமக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விசாணைகள் மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார் விசாரணை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரிய நீலாவணை பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 60...
  காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலைமையானது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். குளிப்பதற்கான வாய்ப்பு இதனால் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு கூட இந்நாட்களில்...
  புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை (13.02.2024) முதல் ஏற்றுக்கொள்ளப்படும். 2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை ஒன்லைன் முறை மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இணையத்தள முகவரி கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மூலம்...
  72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
  பம்பலப்பிட்டி - டுப்ளிகேஷன் வீதியில் இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வீதியில் பயணிக்க முற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி...