யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை - தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம்....
  மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது...
  ஹிக்கடுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடாத்தி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 08 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் லலித் சதகிரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் 17 வயதுடைய முகவர் ஒருவரை சிகரெட் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டு சந்தேகநபர்கள்...
  200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது மருந்துப் பொருள் தட்டுப்பாடு தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. தட்டுப்பாட்டு நிலை இவற்றுள் மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும் இவ்வாறு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. மேலும் மருத்துவ...
  முட்டையொன்றின் விலையினை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (12) முதல் முட்டை விலையை உயர்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முட்டைக்கான விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், அதனுடன் தொடர்புடைய ஏனைய வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முட்டைக்கு தட்டுப்பாடு அதன்படி இன்று (12) முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை...
  இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணி அறிவிப்பு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியை BCCI அறிவித்துள்ளது. ஜடேஜா, ராகுல் திரும்ப வருகை காயங்கள் காரணமாக இரண்டாவது...
  அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி U19 உலகக்கோப்பையை வென்றது. U19 உலகக்கோப்பை Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. கேப்டன் ஹூக் வெய்ப்கென் 48 ஓட்டங்களும், தொடக்க வீரர் ஹாரி டிக்ஷன் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்ஜாஸ் சிங் 55 அதிரடியாக விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 64 பந்துகளில்...
  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்றது. பல்லேகலவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. நிசங்க 18 ஓட்டங்களிலும், அவிஷ்கா பெர்னாண்டோ 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து கைகோர்த்த சமரவிக்ரமா (52), குசால் மெண்டிஸ் (61) அரைசதம் விளாசினர். இந்தக் கூட்டணி 103 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து சரித் அசலங்கா அதிரடியில் மிரட்ட, ஜனித்...
  நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க தொடங்கினாலும் ஆரம்பத்தில் படாத கஷ்டம் இல்லை. தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் சரியான ரீச், இப்படியே போனால் என்ன ஆவது என 6 பேக்ஸ் வைத்து நடிக்க தொடங்கினார். மிகவும் தரமான நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து இப்போது சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது எல்லாம் வாங்கி ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய விருது...
  இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்று எந்திரன். தமிழ் சினிமா பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் சிட்டி ரோபோவாக காட்டிய விதம் அசத்தலாக. சுருக்கமா இந்த படத்தோட கதைய பத்தி சொல்லனும்னா, 'சனா-வ காதலிச்சோமா, கல்யாணம் பண்ணோமானு இல்லாம, 10 வருஷமா ராப்பகலா கஷ்ட்டப்பட்டு, ஒரு ரோபோ-வ கண்டுபிடிச்சு, அதுக்கு சிட்டி பெயர் வைச்சது மட்டும் இல்லாம அதுக்கு உணர்வுகளையும் கொடுக்க முயற்சி...