கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கத்தாரின் அல் தஹாரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கம் கத்தார் நாட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. விடுவிக்கப்பட்ட...
  லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும்” என இஸ்ரேல் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) விடுத்துள்ளார். காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலானது அதன் அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என்ற பதற்றமும் அச்சமும் காணப்படும் நிலையிலேயே ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார். இதேவேளை...
  மடகாஸ்கர் நாட்டில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி மாதம் மட்டும் 133 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133...
  ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஜோர்தான் மன்னர், நாளை மறுதினம் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மன்னரின் கனடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் விசேடக் கவனம்...
  கனடாவில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கனடாவின் மொனிற்றோபாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு பெண்களும் மூன்று சிறுவர்களும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மொனிற்றோபாவின் கார்மனின் அதிவேக நெடுஞ்சாலை வாகனமொன்று எரியுண்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தில் உள்ளிருந்தும் வாகனத்திற்கு அருகாமையில் இருந்தும் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைவர்களின் வீட்டிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலம்...
  சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பேரம்பலம் புனிதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது.ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் நேற்றையதினம்(11) அவரது இல்லத்தில் தவறான...
  பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று (11.02.2024) வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக...
  தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று முன் தினம் (10.02.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை இதன்போது தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு தெல்லிப்பழை பொலிஸாரால் ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  உழவு இயந்திரத்துடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று (12.2.2024) காலை, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸார் விசாரணை வீதியில் பயணம் செய்துகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக வந்த தனியார் பேருந்து ஒன்று உழவு இயந்திரத்தை மோதித் தள்ளி விபத்துக்குள்ளாகியது. இதன்போது காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை...
  b மாகஸ்தோட்ட பகுதியில் கயிறு கழுத்தில் இறுகியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய், இரு மகள்மார் மற்றும் 12 வயதுடைய மகன் என நால்வர் வசித்து வந்துள்ளனர். தந்தை இறந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தாய் பிள்ளைகளைப் படிக்க வைத்து வாழ்ந்து வரும் நிலையில், மூத்த மகள் பல்கலைக்கழகப் படிப்புக்குச் சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய்...