பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்று நேற்று இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இதன்போது பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கி பிரயோகம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யுவதி ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். பொருளாதார நிலையத்தில் உள்ள மொத்த விற்பனை கடைக்கு துப்பாக்கிகளுடன் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து...
  தேசிய மக்கள் சக்தியின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சி முகாம்கள் வியப்படைந்துள்ளதாகக் தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் காலங்களில் மேலும் ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் மேலும் ஆச்சரியங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். பல்வேறு கூட்டணிகள் மகிந்த - சந்திரிகா, மைத்திரிபால - மகிந்த, ரணில் -...
  பெண்கள் மீதான தவறான நடத்தைகள் மற்றும் இளம் பராய கர்ப்பம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், விசாரணை மற்றும் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த இந்நிலையானது பெண்கள் மற்றும் குழந்தைகளை குறி வைக்கும் இணைய அடிப்படையிலான குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பை இது எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட தகவல்கள் மேலும்.பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் பொறுப்பான நடத்தையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நிர்வாண...
  இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று யக்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் குமார என்ற 65 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செல்லப்பிராணி உலயகொட பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சந்தேகநபர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த உயர் இன நாய்களுடன் உயிரிழந்த நாய் இணைந்து செயற்பட்டதால் அவர் நாயை தீ...
  கொள்கலன் கப்பலில் மலேசியா சென்ற தமிழ் தம்பதி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹோர்ஸ் யுக்ரெய்ன் என்ற கப்பலில் இரகசியமாக மறைந்து மலேசியாவிற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை 39 வயதான ஆண் ஒருவரும் 27 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு பயணம் செய்துள்ளனர். பத்து நாட்களுக்கு போதுமான உணவு மற்றும் நீர் என்பனவற்றை எடுத்துக் கொண்டு இந்த தம்பதியினர் கப்பலில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் கொல்கத்தா துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம்...
  பிரபாகரன் தனிஒரு மனிதனாய் அழிந்துபோனார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான்கு ஆசனங்கள் எனக்கு இருந்தால் சுண்டி சுண்டி மக்கள் பிரச்சனைகளை முடிப்பேன் iதினப்புயல் களம் சிறப்பு நேர்காணல் இலங்கை அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளை விட பிரபாகரனால் சுடப்பட்ட போராளிகளே அதிகம் கடற்றொலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சகோதரப்படுகொலையை நிறுத்துமாறு பிரபாகரனுக்கு குருவிப்படை சங்கரிடம் சொல்லி அனுப்பினேன் பிபாகரன் அதனை கேட்கவில்லை ?-நீங்கள் சகோதரப்படுகொலை செய்யவில்லை-இல்லை நான் செய்யவில்லை விடுதலைப்புலிகளை அரசாங்கத்துடன் இனைந்து ரெலொ. புளொட்...
அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது - நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச்  செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள்...
  நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், பெருமளவிலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் தியாகங்களைச் செய்து, கொரோனா காலத்தில் கூட பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த பட்டதாரிகளுக்கு முறையான ஒழுங்கு முறையிலும் வேலைத்திட்டத்திலும் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பை வழங்குங்கள். இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்கு கூட தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (09) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தானும், ரோஹினி கவிரத்ன...
  எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களது காலத்திலேயே எட்டப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (09) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும்...
  மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள்  தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது நபர் நேற்று (9) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா...