தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அநுரகுமாரவின் கட்சி, தற்போதைய ரணில் அரசுடன் இணைந்து செயற்படும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "தேசிய மக்கள் சக்தி, உலகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும். நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை...
விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இலத்திரனியல் கட்டமைப்பு ஒன்று பொருத்தப்பட்ட பாதணியுடன் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை வெளிநாடு செல்வதற்காக வந்த பயணி ஒருவர் நேற்று (9.2.2024) இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று காலை வேகமாக வந்த கார் ஒன்று வீதிக்கு அருகில் இருந்த நபர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீதி விபத்து சிலாபம் பிரதான பாடசாலை ஒன்றில் 9ஆம் வகுப்பில் பயிலும்...
  கொழும்பில் இருந்து கம்பஹா வரை ரயிலில் பயணித்த யுவதிக்கு கோட்டை நிலையத்தில் இருந்து ஹுனுப்பிட்டிக்கு மட்டும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கம்பஹாவில் வைத்து அவரை சோதனையிட்ட பரிசோதகர்கள் அபராதம் என கூறி அவரிடம் கட்டணம் வசூலிக்க முற்பட்டுள்ளனர். பயணச்சீட்டு பரிசோதகர்கள் இதனால் அங்கு யுவதியின் சகோதரர் ஒருவரும், பயணச்சீட்டு பரிசோதகர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மோதலில் காயமடைந்தவர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக...
நூருல் ஹுதா உமர் மாவடிப்பள்ளி பிரதேச மக்களின் நீண்ட கால தேவையான இருந்துவரும் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ATM இயந்திரம்) ஒன்றை மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிறுவ மக்கள் வங்கி தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷவை இன்று (09) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துரையாடினார். இதன்போது மாவடிப்பள்ளி மற்றும் அதனை அண்டிய பிரதேச பொருளாதார நிலைகள், அரிசி ஆலைகளின் அமைவிடம், பல்வேறு...
(அபு அலா) அட்டாளைச்சேனை - பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய ஆய்வு கூடத்தின் விரிவாக்கல் நிலையம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய ஆய்வு உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இபாம் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவிற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார். கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கப்பெறும்...
பாறுக் ஷிஹான் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ்  மக்களின் போராட்டம் மற்றும்  துஆ பிராத்தனை  இன்று   கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கத்திற்கு ஊர்வலமாக சென்று நிறைவடைந்தது. பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் பல நாட்களாக இடம் பெற்று வருகின்ற நிலையில்  யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள்  மக்கள் உயிரிழந்துள்ளனர்...
  தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தேசிய வீடமைப்பு அதிகார...
  பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரே கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. பெண் படுகொலை சந்தேக நபரான 33 வயதுடைய கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 4 இலட்சம் புதிய நிவாரணப் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்யும் போது சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. முதல் கட்டம்...