கென்யாவில் 191 குழந்தைகள் கொடூர படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிறிஸ்தவ பாதிரியார் பால் மெக்கன்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில், நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்.
தவறான மதபோதனை
அவர்களிடம் சொர்க்கத்திற்கு போக...
இலங்கையில் கர்ப்பிணிதாய்மார்களுக்கு வழங்கப்படும் விட்டமின்களில் தொடர்ந்தும் பற்றாகுறை
Thinappuyal News -
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும், விட்டமின்களின் கடுமையான பற்றாக்குறை இன்னும் நிலவுவதாக தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை எனவும் தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருந்துகள் பற்றாகுறை
இதன் காரணமாக, தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும்...
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும்
Thinappuyal News -
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிவாரணப் பயனாளி
இதன்படி 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை 7,500 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
மேலும் 2,000 ரூபாயாக இருந்த முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர்இ முதியோர் மற்றும்...
ஆனைக்கோட்டை - சாவல்கட்டு கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார்.
குறித்த கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், பி.எஸ்.எம். சார்ள்ஸை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதன்படி காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்தல், கடற்றொழில் துறையை மேம்படுத்திக்கொள்வதற்கு உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளே...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொடர்ச்சியாக காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானை பயிர்களை மிதித்து நாசமாக்கியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இந்த மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் கோரிக்கை
இந்நிலையில், இந்த கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால், அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய், சூரிய புர 9 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் சூரிய புற 9 ஆம் கட்டை பகுதியில் கொட்டபடுகின்ற நிலையில் அதனை அவதானித்து வைத்துள்ள யானைகள் அவ்வாறு குப்பைகளிலுள்ள உணவுகளை உட்கொள்கின்றன.
சுமார் 20 யானைகள் கூட்டமாக இப்பகுதியில் வசிப்பதாகவும் இந்த யானைகள் தினந்தோறும் இவ்வாறு வந்து குப்பைகளை உண்டு விட்டு மீண்டும்...
பயங்கரவாத்த தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குக்குமாரராஜா மற்றும் அவரது மகன் ஜனோஜன் ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மட்டக்களப்பு தரவையில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று(08.02.2024) மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தினால்...
கந்தபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரியை விசாரிப்பது போன்று அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(08.02.2024) அமர்வில் உரையாற்றியபோதே குறித்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டியில்லா கடன் திட்டம்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“கோடிக்கணக்கான கடன்களை செலுத்த தவறிய வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கடன் சலுகைகளை வழங்கிய போதிலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லை.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த...
ஆனமடுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவமானது ஆனமடுவை பிரதேசத்தில் உள்ள நத்தேவ பகுதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இரண்டு நபர்களுக்கு இடையில் தனிப்பட்ட பிணக்கு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உடனடியாக ஆனமடுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன்...