தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கும் : லக்ஷ்மன் எச்சரிக்கை
Thinappuyal News -0
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (08.02.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்தாவது,
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் ஒரு மோசமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி அதற்கு...
கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிரஞ்சன் அபேரத்னவினால் நேற்று (08.02.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் நஞ்சூட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கொழும்பு தெற்கு பொலிஸ்...
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீபன் என்ற தமிழ் அரசியல் கைதி, சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் விஜேதாச ராஜபக்கசவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையில் ஒரு குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ள...
நுகேகொட - மிரிஹான, ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவர்கள் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸ் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பேரில், மிரிஹான பொலிஸார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கையில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக சோதனையின்...
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.
பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் 86000 ரூபா தண்டப்பணமும் இரு உணவகங்களினை சீல் வைத்து மூடவும் மல்லாக...
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள்கைப்பற்றல்
Thinappuyal News -
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 2 நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால்,நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலைமைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மின் உற்பத்தி நிலையங்கள்
அங்கு உரையாற்றிய மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா, அரசாங்கங்கள் எடுக்கும் சில முடிவுகள் மற்றும்...
மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.
நாணயக் கொள்கை சபை நேற்று கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டி வீத வீழ்ச்சி
மத்திய வங்கியினால், கடந்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில், வணிக வங்கிகளுக்கு குறுகிய...
2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு
Thinappuyal News -
2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்த கந்தசாமி இளமாறன் என்ற இளைஞன் ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து காணாமல் போயுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஓமந்தை இராணுவ கட்டளைத் தளபதி, வன்னி கட்டளைத் தளபதி, கொழும்பு இராணுவ கட்டளைத் தளபதி ஆகிய மூவருக்கும் எதிராக ஆட்கொணர்வு மனு, சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேலால் தாக்கல் செய்யப்பட்டு 18...
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு அறிவிப்பு
Thinappuyal News -
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் நினைவூட்டல் விடுத்துள்ளது.
பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பதிவுப் பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் இருப்பவர்களின் விபரங்கள் அவர்களது வீடுகளில் பெறப்படும் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என தேர்தல்...