அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் கட்சியினரை சந்தித்துள்ளார். அக் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களான ”Wiley Nickel, Deborah Ross, Jamie Raskin, Danny K. Davis ”ஆகியோரைச் எம்.பி கஜேந்திரகுமார் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது இலங்கைத் தமிழர்களின் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சந்திப்பில் ஈடுபட்ட அமெரிக்க காங்கிரஸ் கட்சி அரசியல்...
  பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதாக என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போதியளவு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளாத, லிபரல் அரசாங்கத்திற்கு என்.டி.பி கட்சி ஆதரவினை வழங்கி வருகின்றது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் மாதத்திற்குள் மருந்து சீட்டுகளுக்கு...
  கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவோருக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையின் போது, வரி பத்திரம், காப்புறுதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் மது போதையில்...
  எதிர்வரும் பண்டிகை காலத்தில் தலா 20 கிலோகிராம் அரிசி நிவாரணமாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையுடன் இன்று (07.02.2024) ஆரம்பமானது. கொள்கை பிரகடன உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் கடந்த ஆண்டு காணப்பட்ட பொருளாதார நிலைமை, தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி...
  தடை செய்யப்பட்ட 4 கிலோ 500 கிராம் அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியை சட்டவிரோதமான முறையில் விற்பனை முயன்ற மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, தெவிநுவர மற்றும் நகுலுகமுவ பிரதேசத்தில் வைத்து மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொண்டேரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போதே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. திமிங்கலத்தின் ஆம்பர் கைப்பற்றப்பட்ட ஆம்பரின்...
  கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(07.02.2024) இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் 35 இலட்சத்துக்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பளுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் மின் இணைப்பு கம்பியில்...
  நாட்டுக்குள் கொண்டுவரப்பட் 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை, உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. தண்டப்பணம் குறித்த பொருட்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது. அவற்றை உடமையில்...
  மடு கல்வி வலயத்திற்குட்பட்ட கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது இன்றைய தினம் (07.02.2024) காலை மன்னார் - கள்ளியடி பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்றிருந்தது. தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர் இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், “தற்பொழுது பாடசாலை...
  பெரும்போக நெல் அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் சில தனியார் நெல்கொள்வனவாளர்கள் மோசடியான முறையில் அளவைகள் மேற்கொண்டு நெல்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று(07.02.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் கொள்வனவின்போது நிறுவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின்...
  செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 1350 மணல் அனுமதி பத்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுகிறது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு நேற்று(07.02.2024) நடைபெற்ற செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தை தலைமைதாங்கி நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆற்று மணல் அகழ்வு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆற்று மணல் அனுமதி...