மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்தி உயிர் சேதங்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக யானை வேலிகள் போடப்பட்டாலும் யானைகள் சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டால் யானைகளிடம் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் யானைகள் சரணாலயம் ஒன்றுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குருநாகல், அனுராதபுர மாவட்டத்திற்கு அடுத்ததாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது, ஆனால் யானைகளை கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக அதிகாரிகள்,...
தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும் ஹேக்கர் கும்பல் மக்களுக்கு எச்சரிக்கை
Thinappuyal News -
இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும் ஹேக்கர் கும்பல் இயங்கி வருவதாக குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை இழந்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்...
வேலன் சுவாமிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அவரை வார்த்தைகள் மூலம் களங்கப்படுத்தியமைக்கு கட்சி என்ற ரீதியில் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (07.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
“வந்தாரை வரவேற்கும் பாரம்பரிய பண்பு மட்டக்களப்பு மண்ணிற்கு உண்டு என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனினும் சமீபத்தில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட...
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க வந்த வேலன் சுவாமிகள் மனம் நொந்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு
Thinappuyal News -
எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க வந்த வேலன் சுவாமிகள் மனம் நொந்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றையதினம் (07.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“சில கட்சிகள் பிரதேசவாதத்தை கையாண்டாலும் தமிழ்த்தேசிய பாதையில் பயணிக்கும் கட்சியான இலங்கைத் தமிழரசு கட்சி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
மேலும், தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு...
கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம்
Thinappuyal News -
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஜனவரி மாதம் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
இதன்போது அதி கூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை, விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலை மாற்றம் செய்து விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு குற்றாச்சாட்டுகளுக்கு ஏற்ப 18 பேருக்கும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சட்டென சபையிலிருந்து வெளியேறிய சஜித்
Thinappuyal News -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் உட்பட மூவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்றையதினம் (07.02.2024) ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்தார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரே சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வெளியேறும் வேளையில் ஜனாதிபதி தனது கொள்கைப்...
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை ஏற்புடையதல்ல – விக்னேஸ்வரன்
Thinappuyal News -
தமிழர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதி ரணிலுக்கு, விக்னேஸ்வரன் ஆதரவளிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஜனாதிபதி ரணிலை நாடாளுமன்றில் சந்தித்து கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்கள் வெளிநடப்பு
எனினும் என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டன என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.
ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் உரையற்றும் போது...
பொது போக்குவரத்து சேவையில் சிறுவர்கள், பெண்கள் மீது பல்வேறு பாலியல் சேட்டையில் ஈடுபட்ட 18 சந்தேக நபர்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது போக்குவரத்து சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
சிவில் உடையில் பொலிஸார்
பொது போக்குவரத்தை பொதுமக்கள் அதிகம்...
நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 வீட்டு உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் அண்மைக்காலமாக அதிகளவில் ஆட்கொல்லி நோயான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சுற்றாடலை நுளம்பு பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆயினும் குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாது தொடர்ச்சியாக...
ரணில் விக்ரமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சுமார் இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு
இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அவையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தனர்.
எனினும்...