அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார்.
ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த அகமது அவாத் பின் முபாரக் புதிய பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் சவுதி அரேபியாவுடன் நெருக்கமானவர் ஆவார்.ஏமன் கடந்த 2014-ல் இருந்து உள்நாட்டு சண்டையில் சிக்கி தவித்து வருகிறது.
ஹவுதி...
அமெரிக்காவில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் நேற்றையதினம் (05-02-2024) இந்திய மாணவர் ஒருவர் சிகாகோவில் தாக்குதலை எதிர்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக...
கனடாவின் பீல் பகுதியில் கடந்த மார்ச் முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அங்குள்ள 3 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணம் திருடப்படதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன.
இது தொடர்பாக சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையின் முடிவில், பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 41 வயதான இந்திய வம்சாவளி நபர் ஜெகதீஷ் பாந்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவில்கள் மட்டுமின்றி, மேலும் 2 வணிக...
பிரித்தானியா தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஒரு பெண், தனது வீட்டின் ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்குள் செல்ல முயன்றபோது, ஜன்னலில் தலைகீழாக தொங்கிய நிலையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் நடந்த சம்பவம் தொடர்பான காணொளி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லிசா ரோலேண்ட் என்ற அந்த பெண், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்தபோது பையில் சாவியை காணவில்லை.
இதன்போது, வீட்டின் சாவியை...
காஸாவில் நடந்துவரும் இஸ்ரேலின் தாக்குதல்களின் மத்தியில் 15 வயதான ஹுசாம் அல் - அத்தார் எனும் சிறுவன் ஒருவர் 'காஸாவின் நியூட்டன்' எனப் பெயர் பெற்றுள்ளார்.
குறித்த சிறுவன் கட்டடங்கள் அனைத்தும் குப்பைகளாகி, நிலை குலைந்திருக்கும் நிலையில் கிடைத்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்திருக்கிறான்.
இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்கு காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழிவகை செய்துள்ளான் ஹுசாம்.
இந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு இணையதளத்தில்...
தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பெரும் பணக்காரரான இவர் இரண்டு முறை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
சிலியின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு செபஸ்டியன் பினேரா தனது சொந்த ஹெலிக்கொப்டரை செலுத்திச் சென்றுள்ளார். ஹெலிக்கொப்டரில் செபஸ்டியன் பினேரா உள்ளிட்ட மொத்தம் 4 பேர் பயணித்துள்ளனர்.
மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும்
திடீரென அந்த ஹெலிக்கொப்டர் தெற்கு...
மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள்சட்டத்திற்கு முரணான கட்டுமான முயற்சி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
Thinappuyal News -
மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ. சச்சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
இது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மூதூர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த காணியானது நீண்டகாலமாக இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது..
மன்றத்திற்கு சொந்தமான இக்காணியை சிலர் போலி ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயல்கின்றனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
இது...
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று (06.02.2024) நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர், மாகாணத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பிலும், கல்வி துறைசார் தேவைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அந்தவகையில், பின்தங்கிய பகுதிகளில் காணப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க மத்திய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வளங்களை சமனாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலிருந்து பெரியகல்லாறு வரையிலான பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ள நீரோடையை ஒன்றிணைத்து சிறியரக மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்குரிய சாத்திய வளங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று(06.02.2024) இந்த கள விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
பெரும் சிரமங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலிருந்து பெரியகல்லாறு வரையிலான கடற்றொழிலாளர்கள் தமக்குரிய இறங்குதுறை (துறைமுகம்) ஒன்று இன்மையால் அவர்களது மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாமல் பெரும் சிரமங்களை மிக நீண்டகாலமாகவிருந்து எதிர்கொண்டுவருகின்றனர்.
எனவே இவ்விடயம் குறித்து அப்பகுதி...
ல்லைத்தீவு – உடையார் கட்டு வடக்கு பிரதேசத்தில்புதிதாக திறக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வகம்
Thinappuyal News -
உடையார் கட்டு வடக்கு பிரதேசத்தில் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முதியோர் ஓய்வகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா நிகழ்வானது இன்று (06.02.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் முதியோர் ஓய்வகத்தை திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.
தேசிய செயலக நிதி அனுசரணை
முதியோருக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் மாவட்ட செயலம் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முதியோர் ஓய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு...