ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் வெடி விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
Thinappuyal News -0
ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (05.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய பழனி வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த நபர் தேன் எடுப்பதற்காக காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் காட்டிற்குள் இருந்த சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதையடுத்து வளர்ப்பு...
ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐந்தாவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இதனைமுன்னிட்டு இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பான ஒத்திகையொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) மு.ப 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய...
சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததையடுத்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்ட ஜகத் பிரியங்கர, வியாழக்கிழமை (8) காலை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 80082 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்ததார்.
இந்நிலையில், தோல்வியடைந்தவர்களின் பட்டியலில்ஜெகத் பிரியங்கர முதலிடத்தைப் பெற்று 40527 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர...
வியாழேந்திரனின் அலுவலக விடுதிக்கு 5500 ரூபாய் மின்சார நிலுவையை செலுத்தவில்லை என தெரிவித்து மின்சார சபையால் வழங்கப்படும் மேலதிக பணத்திற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார நிலுவை 40 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் மாத்திரமே மின் துண்டிப்பு செய்வதாக மின்சார சபை அதிகாரிகள் நேற்று(06.02.2024) நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் விடுதிக்கு 5500 ரூபாய் கட்டவில்லை என்பதற்காக மின் இணைப்பை துண்டிக்கப்பட்ட நிலையில்...
ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் அங்கத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரே இன்று (06.02.2024) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தான் அந்த குழுவில் இரண்டு வருடங்களாக அங்கத்தவராக இருப்பதாக குறித்த சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
குழுவின் இலச்சினை
அதேவேளை, ஆவா குழுவின் இலச்சினையில் உள்ள '001' என்ற எண்ணுக்கான விளக்கம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும்...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினத்திற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
அனைத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் காலை பத்து மணிக்கு...
மீன் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன் விலை வீழ்ச்சியினால் கடற்றொழிலாளர்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளார்.
வரையறுக்கப்பட்ட உணவு கொள்வனவு
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், அநேகமான மக்கள் உணவு கொள்வனவினை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் ஜயந்த குரே...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள தேராவில் குளம் நிரம்பி நீர் வெளியேற முடியாத நிலையில் காணப்படுவதால் குளத்தினை அண்டிய 10 வரையான குடும்பங்களின் வீடுகளுக்குள் மழைவெள்ள நீர் தற்போது புகுந்து காணப்படுவதால் உறவினர்களின் வீடுகளில் தங்கிவாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலப்பகுதியில் குறித்த வீதியில் உள்ள தோரவில் குளத்து நீர் வெளியேறும் பாலம் ஒன்று சேதமடைந்ததாரல் அருகில் உள்ள தேக்கங் காடுகள்;...
கணனி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (06) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இரண்டு சாதாரண கார்களாக...
தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த வேளையில் தூங்கிவிட்டதாகவும், கெக்கிராவ தொடருந்து நிலையத்தை கடந்து சிறிது...