பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்...
  யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன. கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சினைகள், பாடல் மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும்...
  கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியில் இருந்து பதவிவிலகல் செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (6.2.2024) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலை சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில்...
  தொழில்சார் கல்வி மட்டுமல்ல துறைசார் மனித விருத்தியை மேம்படுத்துவதே இலக்கு என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி மாத்திரம் அல்ல. கல்வியுடன் தொழில் கல்வி, திறன் விருத்தி, ஆராய்ச்சி உள்ளிட்ட விடயங்களை ஊக்குவிப்பதே எமது இலக்கு. அதற்காகவே இந்த விஜயமாக அமைகிறது. இப்பொழுது ஜேர்மன் ரெக் மூலம் இடம்பெறும் பயிற்சிகள் தரத்தில் உயர்ந்துள்ளது....
  நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (06) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 130 கிராம் ஹெரோயின், 159 கிராம் ஐஸ், 900 கிராம் 1725 கிலோகிராம் கஞ்சா ஆகியன சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸாரால்...
  கெஹெலிய ரம்புக்வெல விவகாரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை தரம் குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் இன்னமும் இறுதி தீர்ப்புகள் வெளியாகாததால் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்த நடவடிக்கையையும் எடுக்காது என...
  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தினார். NZ Vs SA 1st Test தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி Bay Oval மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 144 ஓவர்கள் முடிவில்...
  விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தடுமாறிய இந்திய அணி தற்போது 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி புன்னகையுடன் களமிறங்கியுள்ளது. 2வது இன்னிங்சில் இந்தியா கொடுத்த 399 ஓட்டங்கள் இலக்கை துரத்தி களமிறங்க களமிறங்கியது இங்கிலாந்து. 292 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம்...
  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான்- இலங்கை ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 2-ம் திகதி தொடங்கியுள்ளது. அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்து 198 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் அதிகபட்சம் 91 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணியில் விஸ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா...
  நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா இரண்டு வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் முனிஸ் ராஜா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ராஜ்கிரண் எதிர்ப்பை மீறி அவர் இந்த திருமணத்தை செய்ததால் தனது பெயரை எங்கேயும் பயன்படுத்த கூடாது என ராஜ்கிரண் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீனத் பிரியா தான் முனிஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டு அப்பா ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். குடித்துவிட்டு அடிப்பார் இந்நிலையில் தற்போது ராஜ்கிரணின்...