பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாகாணத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய பள்ளிவாசல் நிர்வாகங்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் டேவிட் எபியிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல்வேறு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
மாகாண கல்வி அமைச்சர் செலினா ரொபின்சன் அண்மையில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய மக்களின் நிலவுரிமை தொடர்பில் வெளியிட்ட கருத்து பலஸ்தீன மக்கள் சமூகத்தை...
சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளது.
மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து அவுஸ்திரேலியர்களும் அவர் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர் அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரையை...
இங்கிலாந்து அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (வயது 75). இவரது தாயார் அரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.
அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார். சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அரசருக்கு புற்றுநோயின் ஒரு...
வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா பீரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2027ம் ஆண்டு வரையில் வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு பிரஜைகள், நிறுவனங்கள் கனடாவில் வதிவதற்காக வீடுகள் கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடிய மக்களுக்கு மலிவு...
மேற்குக் கரையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது.
கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அதிபர் பைடன் அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தார்.
மேலும் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது அமெரிக்காவைப் போல்...
பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து16 நாளாக சாப்பிடும் நபர்! வித்தியாச முயற்சி
Thinappuyal News -
விஞ்ஞான ரீதியில் பரிசோதனை என்ற பெயரில் நபரொருவர் வித்தியாச முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
ஜான் என்ற பெயர் கொண்ட அந்த நபர், சமைக்கப்படாத பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார். கூடவே சமைக்காத பச்சை முட்டைகளையும் சாப்பிடுகிறார்.
அவருடைய பரிசோதனை பற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில்,
ஏதேனும் சில விசயங்களை செய்ய கூடாது என யாரேனும் என்னிடம் கூறினால், அதனை செய்து பார்க்க வேண்டும் என அது எனக்கு சிறியதோர் ஆர்வம் ஏற்படுத்தி விடும்....
இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையம் வந்திறங்கியபோது, அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
கடந்த மாதம், அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி, குஜராத்திலுள்ள Mehsana என்னுமிடத்தைச் சேர்ந்தவரான நிர்மல் பட்டேல் (25) என்பவர், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவரது பாஸ்போர்ட்டை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது பாஸ்போர்ட்டில் சில பக்கங்கள் இல்லாதது தெரியவந்துள்ளது.
ஆதாவது, அவர் தனது...
வடமராட்சியில் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் (05.02.2024) ஆமைகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக இவ்வாறு ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
கடல் கொந்தளிப்பு
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் காயமடைந்த நிலையில் இவ்வாறு ஆமைகள் கரையொதுங்குவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தமை பாரிய சாதனை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உரித்து (உருமய) திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிற்பகல் ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பாரிய சாதனைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும்,...
கோட்டாபய வெற்றி பெறுவதற்காக ஜே.வி.பி கத்தோலிக்க மக்களை கொன்றதா என்று மக்கள் விடுதலை முன்னணியிடம் நான் கேள்வி எழுப்புகின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கனேமுல்ல பகுதுயில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நமது நாட்டின் வருமானம் போருக்கே செலவிடப்பட்டது. போர், இயற்கை சீற்றங்கள், 83...