கிளிநொச்சியில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மொழி, பிராந்திய வேறுபாடின்றிக் குரல் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பானப் பல்கலைகக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் (04.02.2024) ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேசிய...
விசுவமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று( 05.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, பரந்தன் A35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.
தவிர்க்கப்பட்ட உயிர் ஆபத்து
இதன்போது வேக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்களால் நிறுத்தி...
கொக்குவில் பகுதியில் 2 ஆவது மாடி கட்டிடத்தில் வேலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (05.02.2024) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இளவாலை - பெரியவிளான் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சூசை சுதர்சன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த நபர் நேற்றைய தினம்(05) வேலை செய்துகொண்டிருந்த பொழுது 2 ஆவது மாடி கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதன்போது அவர் மீட்கப்பட்டு...
கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமானது.
இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
பாடல் போட்டி
இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மையில் இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கில்மிஷா பங்கேற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்க தீர்மானம்
Thinappuyal News -
இராணுவ முகாம்களில் இருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் அவ்வப்போது கையளிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
அத்துடன், ஆயுதக் காப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இராணுவத் தளபதிகள் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுக்காற்று நடவடிக்கை
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இடம்பெற்ற பல பாதாள உலகச்செயற்பாடுகளில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து இராணுவ விதிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை...
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இடைத்தரகர்கள் குழுவொன்று முட்டையின் விலையை அதிகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் முட்டை விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (05.02.2024) இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மரண விசாரணை
குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(05) காலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பிற்பகல் உயிரிழந்துள்ளது.
மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி...
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியினை...
கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05.02.2024) முன்வைத்திருந்தார்.
அமைச்சரவை அனுமதி
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் அவரது நீண்ட கால முயற்சியின் பலனாக கஞ்சா வளர்ப்பில் வெளிநாட்டு முதலீடுகளை...
பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவில் ஏற்பட்ட தகராறு
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக்...