ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.
வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை அதிக இலாபத்துடன் வாங்க நுகர்வோருக்கு வழிகாட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
சில்லறை விலை
காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச...
மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சூரியவெவ - வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே இவ்வாறு விஷம் அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளனர்.
மனைவியின் முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக படுக்கையிலேயே உள்ள நிலையில் அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால்...
பாடசாலைகள் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்கின்றார் கல்வி அமைச்சர்
Thinappuyal News -
பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புதிய தொழிநுட்பத்தின் மூலம் மாணவர்கள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 3,000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்வரும்...
70 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாது அல்லல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டதினை கண்டிக்கும் வகையில் அவர் முகநூலில் பதிவொன்றினையிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு,
76 ஆவது சுதந்திர தினம் எங்களுக்கு உண்மையான சுதந்திரமா? நாட்டில் 70 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது மூன்று வேளை சாப்பாட்டைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது அல்லல்படுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி
சுதந்திர...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபரை வளன ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வளன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் நோக்கில்
மவுண்ட் யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே சந்தேக...
ஸ்மார்ட்போன் பேட்டரியை பாதுகாப்பது எப்படி? தண்ணீரில் விழுந்த போனை அரிசியில் வைக்கலாமா?
Thinappuyal News -
உங்கள் ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் உலா வரும் பல தகவல்கள் வெறும் கட்டுக்கதைகள் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஸ்மார்ட்போன் கட்டுக்கதைகள்
இந்தியாவில் பல கோடி மக்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனர், இந்தியர் ஒருவர் சுமார் 4.9 மணி நேரம் ஒரு நாளைக்கு சராசரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார் என்ற தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் குறித்த பல பொய்யான அல்லது கட்டுக்கதையான தகவல்கள் நம்மை சுற்றி உலாவி கொண்டு இருப்பது தவிர்க்க...
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்த 12 செயலிகள் ஒன்று இருந்தாலும் உடனே நீக்கி விடுங்கள்
Thinappuyal News -
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த 12 செயலிகளை இருந்தால் உடனடியாக நீக்கி விடுங்கள் என்ற எச்சரிக்கை தகவலை பாதுகாப்பு வல்லுநர்களான ESET தெரிவித்துள்ளது.
திருடப்படும் தரவுகள்
இணையதள பாதுகாப்பு நிபுணர்களான ESET, மிகவும் ஆபத்தான 12 உளவு ஆண்ட்ராய்டு செயலிகளை கண்டுபிடித்துள்ளனர்.
தகவல் பரிமாற்ற செயலி(chat apps) போன்ற தோற்றங்களில் காணப்படும் இந்த உளவு செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் Trojan எனப்படும் கட்டுப்படுத்தும் மென்பொருளை உட்செலுத்தி உங்களின் அழைப்பு விவரங்கள்,குறுஞ்செய்திகள், கேமரா கட்டுப்பாடு...
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Ola Electric 4 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட Ola S1 X என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரை செல்லும்.
இந்த Ola S1 X ஸ்கூட்டர் ரூ.1.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமாகியுள்ளது.
Ola S1X 6 கிலோவாட் மோட்டார் மூலம் வேலை செய்யும் இந்த ஸ்கூட்டர் வெறும்...
Apple Vision Pro Headset விற்பனை ஆரம்பம்: சிறப்பம்சங்கள், விலை குறித்த முழு விவரம்
Thinappuyal News -
ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோ ஹெட்செட் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
Apple Vision Pro ஹெட்செட்
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் (Apple Vision Pro headset) அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் விலை 3,500 அமெரிக்க டொலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய விற்பனைக்கான முன்பதிவை உலகின் மற்ற பகுதிகளில் தொடங்கும்...