யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து முன்னெடுத்துவரும் தாக்குதல்களிற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டறிக்கையொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் வெளியிட்டுள்ளார்.
செங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மாலுமிகளின் உயிர்களிற்கும் சர்வதேசவர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்ட...
நமீபியா ஜனாதிபதி ஹஜி ஜிங்கொப் புற்றுநோயால் தனது 82 வயதில் காலமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபர் ஹஜி கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தலைநகர் விண்ட்ஹொக்-யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜனாதிபதி ஹஜி ஜிங்கொப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதிபர் ஹஜி ஜிங்கொப்பின் மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து...
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது.
மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின்...
வட்டுக்கோட்டை தீர்மானம் தான் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன்
Thinappuyal News -
வட்டுக்கோட்டை தீர்மானம் தான் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் தற்போதைய தமிழ் அரசு கட்சியின் தலைவர் சிறிதரன் 2010 ஆண்டு E P R L F ஊடாக போட்டியிட்டு வென்றவர்
புலிகள் என்னை சுட்டக்கொல்லுமாறு உத்தரவிட்டார்கள் நான் இப்போது தான் நின்மதியாக வாழ்கிறேன் இவ்வாறு கூறினார் சம்பந்தன் சுமந்திரன் கூட்டமைப்பின் பிளவுக்கு முழுக்காரணமும் கிடையாது சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் என்று நாம் கூறியபோது தமிழரசு...
‘கேமர் தாத்தா’ என அழைக்கப்படும் 88 வயதான யாங் பிங்லின், உலகின் மிகவும் வயதான கேமிங் ஸ்டீமர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஃபுஜியானில் உள்ள ஃபுஜோவைச் சேர்ந்தவ யாங் பிங்லின்.
எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு தோண்டுதல் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.பணி ஓய்வு பெற்ற பின், வீடியோ கேம்கள் விளையாடத் தொடங்கியுள்ளார்.
தான் வீடியோ கேம்களை விளையாடும்போது அதனை நேரலையில் ஒளிபரப்பி வந்த இவர்...
கனடாவில் குடியேறும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன.
நாட்டிற்குள் குடிபெயர்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடியேறுபவர்களில் 15 வீதமானவர்கள் தாயகம் அல்லது வேறும் மூன்றாம் நாடொன்றிற்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டுக்குள் குடிப்பெயர்ந்து 20 ஆண்டு காலப் பகுதிக்குள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1982ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கனடாவிற்குள் குடியேறியவர்கள் பற்றிய தகவல்களின்...
பிரான்ஸ் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது தாக்குதல்
கத்தி மற்றும் சுத்தியலுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
புகையிரதபாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலை மேற்கொண்டநபரை தடுத்து நிறுத்திய நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதோடு இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் போல...
அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதோடு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியபோது தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.
இந்த காட்டுத்தீயால்...
ரஷியாவைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்திற்குப் பொருத்தமான பெண்ணை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு செய்துள்ளார் சாட்ஜிபிடி மூலம் தனது வருங்கால மனைவி யார் என்று கண்டுபிடித்துள்ளார்.
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
உலகம் முழுவதும் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து...
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கையின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (04.02.2024) இடம்பெற்ற சுதந்திர தினத்திற்கெதிரான கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழக மாணவர்களின் விடுவிப்பு தொடர்பாக பொலிஸ் நிலையம் சென்று அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கரிநாள் போராட்டம்
இது குறித்து அவர்...