குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது. தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினை தொடர்ந்து இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதனால் தொடருந்து சமிக்ஞைகளும் பாதிக்கப்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கோரிக்கை நீரூற்றுக்கள் காணப்படும் பிரதேசத்தில் குறித்த தீ வைப்பு இடம்பெற்றுள்ளதால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும்...
  கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று(04.02.2024) இடம்பெற்றுள்ளது. புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திரத் தின நிகழ்வைப் பார்த்துவிட்டு முச்சக்கர வண்டியில் திரும்பிச் செல்லும் போது கற்பிட்டி பகுதியிலிருந்து வருகைத் தந்த முச்சக்கர வண்டியுடன் மோதூண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சை இதன்போது கற்பிட்டியிலிருந்து முச்சக்கர வண்டியில் பின்புறத்தில் அமர்ந்திருந்த ஐந்து பேரில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு...
  76 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் முன்னெடுக்கபட்டது. கல்முனை நகரப் பகுதியில் நேற்று(04.02.2024) நடைபெற்ற குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது .எனினும் வடக்குக் கிழக்கெங்கும்...
  கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமால் சஞ்சீவ இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அரச நிதியை துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய அமைச்சரவையில் நீடிக்கப்பட கூடாது என வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத செயல் கெஹலிய அமைச்சரவையில் தொடர்ந்தும் நீடித்தால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச...
  அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். அனுரகுமார உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாக கட்சி அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அனில் ஜயந்த ஆகியோர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ...
  ஒக்டோபர் முதல் வாரம் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மீண்டும் ஒரு முறையாவது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதி ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ரணில் விக்ரமசிங்க நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் என்றும்,...
  கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். 10 கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதலில் கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறை மற்றும் பல இடங்களை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். புனர்வாழ்வு நிலையம் புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கும் மோதலை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களும் சோதனைகளின்...
  சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்கவை கட்சியின் மூத்த ஆலோசகராக நியமிக்க பிரேமதாச எடுத்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா விமர்சித்த சில நாட்களுக்குப் பின்னர் பிரேமதாசவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "யாருக்கு நான்...
  கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தானும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டி உள்ளார். சாதாரணமாக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டதானது இலங்கை அரசின் கோரமுகத்தையும் அராஜகத்தையும் சர்வதேசத்தின் கண்முன் கொண்டு வந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வரலாற்றில்...
  76 ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் மதத்தலைவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04.02.2024) இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் தடை உத்தரவுகள் இரவோடு இரவாக வழங்கப்பட்டிருந்தது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இவ்வாறான...