மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் வானும் காரும் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்
Thinappuyal News -0
மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் காரும் வானும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (04.02.2024) இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஒன்றை வான் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வான் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை விபத்தின் போது காரில் இருந்த 5 பேர் மற்றும் வானில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 7 பேர் தங்காலை, அங்குனுகொலபெலஸ்ஸ...
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் மணல் மற்றும் மண் என்பன ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏல விற்பனை நாளையதினம்(06.02.2024)பகல் 9 மணிக்கு ஏலத்தில் விடப்படவுள்ளது.
ஏல விற்பனை
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட 99 கியூப் மணல் மற்றும் 12கியூப் மண் என்பனவற்றின் ஏல விற்பனை நடைபெறவுள்ளது.
குறித்த மண் மற்றும் மணலின் ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் பார்வையிட...
5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று (04) ஹபராதுவயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுதம்பே, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்காலை, பெலியத்தை பிரதேசத்தில்...
விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்துகம ஓவிட்டிகல கொரட்டில்லாவ பகுதியைச் சேர்ந்த டொன் கலன மதுஷன் (வயது 32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருந்தில் கலந்துகொண்ட மத்துகம வெலிகட்டிய சண்டசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மத்துகம...
76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெற்று வருவதுடன், தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.
'புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்' என்பதே இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தொனிப்பொருளாகும்.
இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும்...
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (2) கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கெஹலிய நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றையதினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மருந்து...
தமிழரசுக் கட்சியுடன் பொதுச் சின்னத்தில் இணையத் தயார்! செல்வம் அடைக்கலநாதன் அதிரடி
Thinappuyal News -
பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுச் சின்னம்
தமிழ் கட்சிகள் 5 ஒன்றிணைந்து ஓரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பொதுச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே நாங்கள்...
பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியது.
குறித்த யோசனை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பிரவேசம்
இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஆசியும்...
76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர விழாவை முன்னிட்டு கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேலும்...
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடைபெறும் நிலையில் அணியில் 3 முக்கிய மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்துள்ளார்.
2வது டெஸ்ட் போட்டி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை...