ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ள நிலையில் அந்த குழுக்களை இலக்குவைத்து அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது. பதிலடி கொடுக்கப்படும் இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன்...
  17 ஆம் நூற்றாண்டின் களவுபோன ஓவியத்தை மாறாட்டம் செய்ததால் இத்தாலிய அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி (Vittorio Sgarbi) பதவி விலகியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள பண்டைய நாடு, இத்தாலி. ரோமானிய கலாச்சாரத்தை பறைசாற்றும் இத்தாலி. நாட்டில் பழங்கால ஓவியங்களுக்கும் ஓவியர்களுக்கும் இன்றளவும் ஆர்வலர்கள் அதிகம். திருடு போன The Capture Of Saint Peter நாட்டின் 605 இடங்களை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும்,...
  கனடாவில் தெற்காசிய மக்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா முழுவதிலும் இவ்வாறு தெற்காசிய மக்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்காசிய வர்த்தகர்களிடமிருந்து கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான கப்பம் கோரல்கள் தொடர்பில் 20 நிறுவனங்கள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.கப்பம் வழங்குவதற்கு மறுப்பு...
  கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தை பலி சம்பவத்தில் கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசமுத்தையா சசிவதனன்...
  போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு குறித்த நினைவேந்தல் தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் தன்னை விடுதலை செய்த போதிலும், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் கேள்வி எழுப்பிய விதம் உரிமை மீறல் என விமலசேன லவகுமார் குறிப்பிட்டுள்ளார். “மாவீரர் தினத்தை செய்வதற்கு உங்களுக்கு...
  23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் திருடிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம்(01.02.2024) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜருள் அவர்களின் வழிகாட்டுதலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான அணியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணை இதன் போது திருட்டு சம்பவத்துடன்...
  மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இதன்போது அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் தலைமன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மரணத்திற்கான காரணம் பின்னர்...
  மாணவன் ஒருவர் வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொத்தபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார். பொத்தபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்திவெல பிரதேசத்தில் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரொனித் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பாடசாலையில் ரக்பி வீரர் எனவும் பெற்றோரிடம் கையடக்கத் தொலைபேசி கேட்டபோதும் பெற்றோர் தர மறுத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் பரிசோதகர் இதன் காரணமாகவே குறித்த மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார்...
  பெண்ணொருவரின் கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தி கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சாதனை படைத்துள்ளனர். தென்னை அரைக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, ​​திடீரென வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையில் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி இரண்டாக வெட்டுப்பட்டுள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...
  சரசாலை பகுதியில் 20 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (2.1.2024) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.