உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை காலம் இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 2009 இறுதி யுத்தம் வரையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்கப்படும். மேலும் அவர்களின் 55 ஆவது பிறந்த நாள் வரை குறித்த கொடுப்பனவுகளை வழங்க...
  ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளுடன் ஒருங்கிணைத்து செயற்படுவது இந்தக் குழுவின் பிரதான கடமைகளில் ஒன்றாகும். இதற்கு மேலதிகமாக கட்சியின் பிரசார பொறிமுறையும் இந்தக் குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடவடிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட...
  விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. . நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றால், அதை உடனடியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு தடுக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச்...
  அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை இராணுவத்தின் லயன் ரெஜிமண்ட் படைப்பிரிவில் கடமைப்புரிந்த இராணுவ மேஜர் நிஷாந்த டயஸ் என்பவரே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை முழுமையாக வழிநடத்தியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் இராணுவத்தில் தொடர்ச்சியான முறைகேடுகளில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து இலங்கை இராணுவத்தில்...
  மத்துகம பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொலை சம்பவமானது இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய எம்.கலன என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். மேலதிக விசாரணை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த குறித்த நபர் களுத்துறை - நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்...
  பெருந்தோட்டத்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த விலகிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்ற வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்கநாயக்க நேற்றைய தினம் (2.2.2023) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதிவிசேட வர்த்தமானி கடந்த 29ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் லொஹான் ரத்வத்தயின் நியமனம் மற்றும் பதவி விலகல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது வர்த்தமானி அறிவித்தலில் லொஹான் அமைச்சராக நியமிக்கப்பட்ட குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது...
  கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (2.2.2024) கைது செய்யப்பட்டிருந்த கெஹெலிய ரம்புக்வெல்லவை நேற்று மாலையே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய இன்றைய தினமே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். தரமற்ற மருந்து மோசடி அதற்கேற்ப தற்போதைக்கு மாளிகாகந்தை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துப் பொருள் மோசடி...
  வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நேற்று முன் தினம் (01.02.2024) இரவு முதல் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காரியாலயம் முன்பாக வரிசையில் காத்திருந்தமையுடன் வரிசையில் காத்திருந்தவர்களுக்கான வரிசை இலக்கம் பொலிஸாரினால் வழங்கப்பட்டது. வரிசையில் நின்றவர்களின் பெயர்களையும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பதிவு மேற்கொண்டனர். இந்நிலையில் 85ஆம் இலக்கம் பெற்ற நபர் வாயிலின் வெளியே வரிசையில் நிற்கத்தக்கதாக இனி...
  தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்ட்டது ஒன்று அதில் மாற்றுக்கருத்து இல்லை சம்பந்தன் கூறுவது பொய் புலிகள் இருந்திருந்தால் அவருடைய பொய்க்கு பரிசு கிடைத்திருக்கும் கூட்டுக்கட்சி ஒன்றிணைவு நடந்தது என்ன? - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
  ஆனையிறவு பகுதியில் கடந்த 24(24.01.2024) ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றையதினம்(01.02.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இருந்து இரணைமடுவுக்கு மாடுகளை கொண்டு சென்றுள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இதன்போது...