இஸ்ரேல் நாட்டில் ஷபாரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அரேபிய-இஸ்ரேலியரான ரஜி ஹமடா, கடந்த டிசம்பர் இறுதியில், போக்குவரத்து போலிஸாரின் வாகன சோதனையின்போது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அவர் போலிஸாரிடம் கூறும்போது, ஹைபா பகுதியில் உள்ளரசாயன தொழிற்சாலை ஒன்றை தீ வைத்து எரிக்கவும் மற்றும் பொலிஸ் நிலையம் ஒன்றை கொளுத்தவும் திட்டமிட்டிருந்தேன் என கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
ஹைபா பே பகுதியில்...
ஜப்பானில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சம்பவத்தில் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் திரையிடப்பட்ட தென்னிந்திய திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரொறன்ரோவின் சில திரையரங்குகளில் "மலைக்கோட்டை வாலிபன்" என்ற கேரள திரைப்படம் திரையிடப்பட்டது.
முதல் காட்சி திரையிடப்பட்ட போதே சில திரையரங்குகளில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சில திரையரங்குகளின் ஜன்னல்களுக்கு துப்பாக்கிச் சூடு காரணமாக சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த திரைப்படம் காட்சிப்படுத்துவதனை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்டன், ஸ்காப்றோ மற்றும் வோன் போன்ற இடங்களிலும் திரையரங்குகளில்...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டாக் போர்ட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கனடாவில் பிணை வழங்குதல் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் இதன் அடிப்படையில் குற்ற செயல்களில் ஈடுபடுபவருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் கார் திருட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என அவர் நேரடியாக...
சமூக ஊடகங்களில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அழுத்தங்களை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் முடியாமற் போயுள்ளது.
சமூக வலைதளம் தொடர்பில் எதிர்காலத்தில் அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சட்டங்களுக்கு இணங்குவதாக இணையத்தள சேவைகளை வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் தமது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
மெட்டா , டிக்டொக், ஸ்னெப், டிஸ்கோர்ட், மற்றும் டுவிட்டர், என இனங்காணப்படும் தற்போதைய எக்ஸ் , உள்ளிட்ட பிரதான சமூக ஊடக நிறுவனங்கள்...
அடுத்த ஜனாதிபதியாகும் தகுதி தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவின் போது பலர் போட்டியிட அஞ்சினர் எனவும், தாமே தைரியமாக முன்வந்து தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலின் போது பல கட்சிகளின் ஆதரவு கிடைக்கப்பெற்றதாகவும் 84 வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் எனவும் அதற்கான சகல தகுதிகளும் உண்டு...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு வாவிக்கரையில் பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று முன்தினம் (30) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்கோது கசிப்பு உற்பத்தியல் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் 25 பீப்பாக்கள் மற்றும் உபகரணங்களை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை
இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பலர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற...
கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(01.02.2024) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் பெப்ரவரி 4 ஆம் திகதி நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை நேற்று(01.02.2024) தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழர் தேசம்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெப்ரவரி 4 ஆம் நாள், 76 வருடங்களுக்கு முன்னர் தமிழர் தேசத்தின் இறைமையை பிரித்தானியரிடமிருந்து கையகப்படுத்திய சிங்கள - பெளத்த பேரினவாதம்,...
பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் இளைஞரொருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று(01.02.2024) எம்மால் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில்...