1948ம் ஆண்டில் இலங்கைக்கு அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அணிசேரா கொள்கைகளிலிருந்து விடுபட்டு அமெரிக்க அடிமைத்துவ கொள்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தேசிய பொருளாதாரம்
எமது காணிகள் மற்றும் வளங்களை வெளிநாடுகள் சுரண்டுவதனை தடுத்து உள்நாட்டு தேசிய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து...
இலங்கை போக்குவரத்து சபையினால் கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஒருதொகை அதிசொகுசு பேருந்துகள் ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையின் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் சிறு திருத்தங்கள் காரணமாக குறித்த பேருந்துகள் சுற்றுலாத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுடன் போக்குவரத்துச் சபையும் குறித்த பேருந்துகளை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தது.
ஒரு லட்சம் ரூபா வரை வருமானம்
இந்நிலையில் அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த...
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த 25 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் இருந்த 6000 டொலர் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் பெண் நானுஓயா பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுற்றுலா பெண்
கடந்த 29 ஆம் திகதி கண்டியில் உள்ள தங்குமிடமொன்றில் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக...
குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதன்போது அவருக்கு கடந்த 23 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கொழும்பு மோதர ஹெலமுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்று வழங்கப்படவுள்ளதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவரை ஏமாற்றி 15 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர் ஒருவரையே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பண மோசடி
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியது போன்ற போலியான ஆவணங்களையும் இந்த நபர் இந்த பெண்ணிடம்...
மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் சாத்தியமில்லை என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதிய மின்சார சக்தி சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் நீக்கப்படாவிட்டால், மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமூல முன்மொழிவுகள்
இந்த சட்டத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார சக்தி சட்ட மூலம்...
மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் செலுத்தும் வசதியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார சபைக்கு, அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்சார சபையின் ஏனைய சேவைகளுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி தருமாறும், அதற்கான வசதிகளை உடனடியாக அறிவிக்குமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மின்சார சபை
அதற்கமைய, மின்சார சபை விரைவில் வசதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டு...
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.
அமைச்சரவையில் கலந்துரையாடி விலையை குறைப்பதற்கு தனியான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 500,000 பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக்காக நாட்டிலேயே முதன்முறையாக வலுவூட்டப்பட்ட, ஒரு வீதம் இரும்பு மற்றும் போலிக் அமிலம் சேர்க்கப்பட்ட அரிசி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஊட்டச்சத்து குறைபாடு
இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள...
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரனுக்கு எம். ஏ.சுமந்திரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
Thinappuyal News -
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரனுக்கு எம். ஏ.சுமந்திரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதம் வருமாறு,
முதலிலே தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்
கடந்த 21ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பிலே தாங்கள் அதிகப்படியான வாக்குகளாலே தெரிவுசெய்யப்பட்டமை எமது கட்சியின் வரலாற்றிலும் இந்நாட்டின் வரலாற்றிலும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாக்கெடுப்பில் கலந்துகொண்ட...
பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று (01.2.2024) அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோரிக்கைகளுக்கு தீர்வு
தனியார் பேருந்து சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், கட்டாயமாக இரண்டு வாரங்களுக்குள் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாயாக இருக்கும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட...