சாரதி பயிற்சி நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பாக இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் முன் பயிற்சி மற்றும் எழுத்துப் பரீட்சையின் அவசியம் குறித்தும் சாரதி பயிற்சி நிலையங்கள் கவனம்...
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே நேற்றையதினம் (31.01.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவு
இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த 26 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதுடன்,இதன்போது குறித்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்...
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் புறக்கணித்துள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த போது இடம்பெற்ற தரமற்ற மருந்துபொருள் இறக்குமதி செய்தமை தொடர்பில் மேலதிக விடயங்களை தௌிவுபடுத்துக்கொள்ளும் நோக்கில் அவரை நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விசாரணை
அதன் பிரகாரம் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று காலை ஒன்பது மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது...
மின்சார பாவனையாளர்களுக்கு இலகு தவணை முறையில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும்
Thinappuyal News -
மின்சார பாவனையாளர்களுக்கு இலகு தவணை முறையில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தவணை முறையில் பணம்
மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.
இலகு தவணைக் கட்டண முறை மாத்திரமன்றி எதிர்காலத்தில் மின்சார நுகர்வோருக்கு மேலும் சில சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2000 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பதவி உயர்வு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பயனாளிகளுக்கு தொழில்முறை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்றுமதிப் பயிர்களை பயிரிடவும் ஊக்குவித்து வருகின்றோம்.
வெளிநாட்டுச் சந்தையை இலக்காக கொண்டு, முக்கியமாக தேயிலை, கறுவா மற்றும்...
சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாகக் கூறி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட தனியார் வங்கிக் கிளைக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கைது செய்யப்பட்ட போது, ஒரு...
பிரபல பாதாள உலகப்புள்ளியான தெமட்டகொட சமிந்தவின் குடும்ப உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகோதரரான தெமட்டகொட ருவானின் மனைவி, மகன் மற்றும் சகோதரி ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் நேற்றைய தினம் (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட ருவன் என்றழைக்கப்படும் ருவன் சமில பிரசன்ன போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் மூலம்...
ஜெனரல் தயா ரத்நாயக்கவின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு, தாம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதில் ரத்நாயக்கவின் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டை சரத்...
உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று (01) மாணவர்களுக்கு
Thinappuyal News -
உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று (01) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தர விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக வெளியான நிலையில், வினாத்தாளை முழுமையாக இரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய, குறித்த பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இன்று (01) விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல்...