தைவான் நாட்டை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தைவானை சுற்றி ராணுவ விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பி வருகிறது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை காலை 6 மணி முதல், செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையில், தைவானை சுற்றி 9 ராணுவ விமானம் மற்றும் 4...
சீனாவில் நேற்றைய தினம் (30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில்,
ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அட்சரேகைக்கு 41.15 டிகிரி வடக்கிலும், தீா்க்கரேகைக்கு 78.67 டிகிரி கிழக்கிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.
அத்துடன் பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கும் அவரது மனைவி புஸ்ரா பீபிக்கும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மற்றுமொரு வழக்கில் இம்ரான்கானிற்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இம்ரான்கானிற்கும் அவரது மனைவிக்கும் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
அரசாங்காங்கத்திற்கு சொந்தமான பரிசுப்பொருட்களை தங்களது சொத்துக்களாக கருதி விற்பனை செய்தனர் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் நாடாளுமன்ற தேர்தல் இன்னமும்...
கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்ட அலுவலக கட்டடம்
விசமிகளால் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான...
லொட்டரிச்சீட்டு வாங்கும்படி நீண்ட நாட்களாக கணவரிடம் கூறிவந்த பெண்: ஒரே நாளில் மாறிய வாழ்க்கை
Thinappuyal News -
தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர்.
கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் (Krystal McKay), தனது கணவரான லாரன்ஸிடம் (Lawrence Campbell), லொட்டரிச்சீட்டு ஒன்று வாங்கிவரும்படி பல வாரங்களாகவே கூறிக்கொண்டிருக்க, ஒருநாள், கிறிஸ்டலுக்கு பிறந்தநாள் பரிசாக லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.
பிறந்தநாள் பரிசாக வந்த அந்த லொட்டரிச்சீட்டோ, கிறிஸ்டலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம்,...
கனடாவில் நோயாளர்கள் விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் நோயாளிகள் தொடர்பிலான விபரங்கள் சரியான முறையில் பேணப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுக் கொள்கை அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் நோயாளர்கள் பற்றிய அனைத்து விபரங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.
இவ்வாடி டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலம் சிகிச்சைகளை இலகுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார சேவை வழங்கும் நிறுவனர்கள் நோயாளர் விபரங்களை உரிய...
கனடாவின் ரொறன்ரோவில் வீடு கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பிரஜைகள் வீடு கொள்வனவு செய்யும் போது வரி அறவீடு செய்யும் யோசனைக்கு நகர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
ரொறன்ரோ மாநகரசபையின் மேயர், ஒலிவியா சொ இந்த யோசனையை முன்வைத்தார்.இந்த முன்மொழிவினை நகர நிர்வாக நிறைவேற்றுக்குழு அங்கீகரித்துள்ளது.
வதிவிட நோக்கில் ரொறன்ரோவில் வீடுகளை கொள்வனவு செய்யும வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து வரி அறவீடு செய்யப்பட உள்ளது.
வெளிநாட்டுப்...
புவக்கொடமுல்லை பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லா காரணத்தினால் மனமுடைந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, கணிதப் பாடத்திற்காக மேலதிக வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டுள்ளார்.
குடும்பத்தின் வறுமை
எனினும் அவரது குடும்பத்தின் வறுமை காரணமாக அதற்கு பணம் திரட்டிக் கொள்ள முடியாத நிலை...
வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது.
யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய நேற்று(30.01.2024) நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர்.
கோரிக்கைகள் முன்வைப்பு
இதற்கமைய ஏற்கனவே மக்களிடம்...
சுரங்கப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக நிர்மாணப் பணியின் போது அகற்றப்பட்ட கருங்கற்களை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாகம்புர துறைமுக பகுதியின் நிர்வாக கட்டடத்திற்கு அருகாமையிலும் ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை வளாகத்திலும் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன.
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் வரையிலான கற்களை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க...