சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றினை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அங்கு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் அவசர சிகிச்சைக்காக கடந்த 28ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் சுன்னாகம்...
  கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்து தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின்விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீ.ஐ.டி. விசாரணை இந்தியக் கடன் உதவியின் கீழ் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் இம்யூனோகுளோபின் சர்ச்சைக்குரிய மருந்துக் கொள்வனவு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக...
  நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று (31.1.2024) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் இரத்தக் கறைகள் சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொலைகளுக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹூங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைது...
  தப்போவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் - பாவட்டாமடுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரோஹண என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். பெண்ணுடன் தொடர்பு காயமடைந்த நபர், தப்போவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பு இருந்துள்ளதாகவும், அங்கு சென்ற வேளையிலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய...
நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விபத்துக்குள்ளான இரு வாகனங்களின் சாரதிகளும் மூன்றாவது வாகனத்தை குறிப்பிட்டுள்ளதால், நெடுஞ்சாலைப் பிரிவுக்கு தகவல்தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிவேகம், மோசமான தெரு விளக்குகள், கவனக்குறைவு மற்றும் மூன்றாவது வாகனம் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாகன சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் மேலும், இந்த விபத்தின் போது...
  காவியுடைகளை தவிர்த்து சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவரை அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர். களுத்துறை மாவட்டத்தின் தர்கா டவுண் அருகே உள்ள வெலிப்பன்னை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரதேசவாசிகளின் செயல் குறித்த பிக்கு சாதாரண ஆடையில் திஸ்ஸமஹாராம பிரதேசத்துக்கு மூன்று யுவதிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது அவர் தங்கியிருந்த விகாரை அமைந்துள்ள இடத்திலுள்ள பிரதேசவாசிகளில் சிலர் தற்செயலாக அங்கு சென்றிருந்த...
  காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் நேற்று (30.01.2024) இடம்பெற்ற தொழில்நுட்ப முறைமையினூடாக கலந்துரையாடலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த காணி அமைச்சின் செயலாளர், “உரித்து வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக...
  பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. பொது விடுமுறை அதற்கு பதிலளித்தவர் ​​4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும்...