இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14, அல்லது 15 ஆம் திகதியளவில் இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை இதனிடையே, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்...
  சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மனு...
  31ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (29) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையினரின் சுற்றிவளைப்பு மன்னார் காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் காவல்துறை அத்தியட்சகர் சந்திரபால அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனையின் பெயரில் மன்னார் காவல்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்...
  எந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதேவேளை இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் அதிபர் தேர்தல் “எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி தேர்தல் நடக்குமா என்பது தான். எந்தத் தேர்தலை...
  குருமன்காடு கோவில் வீதி பகுதியில் இருந்து கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். சடலமாக மீட்பு குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வவுனியா காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச் சம்பவத்தில்( 29) வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற...
  நுவரெலியாவில் வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஆட்டோ சாரதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சுற்றிவளைப்பில் கைது கைதான சந்தேக நபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நுவரெலியா மாவட்ட நீதவான் திங்கட்கிழமை ( 29) உத்தரவு பிறப்பித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுவரெலியா வஜிரபுர கிராமத்தை சேர்ந்தவர் (வயது 29)...
  தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் அநுராதா ஜயக்கொடியின் வீட்டுக்குச் சென்ற சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா, ஊடகவியலாளர்கள்...
  நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோவாக வலம் வரும் நிலையில், தனது ரசிகர்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். இன்னும் ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை அறிவிப்பார் என செய்திகள் வெளியாகி இருந்தது. அதனால் "த என்ற ஹாஸ்டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆனது. கட்சி பெயர் இதுவா? இந்நிலையில் விஜய் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் "தமிழக முன்னேற்ற கழகம்"...
  ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஈட்டி, ஜீவா, காக்கி சட்டை ஆகிய படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு திடீரென பட வாய்ப்புகள் குறைய துவங்கிய, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் வரவேயில்லை. மதுபோதை...