அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் போராட்டத்தை நடத்தப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு எவரும் எந்த தடையையும் விதிக்கலாம். ஆனால், அனைத்து சட்டங்களையும் மீறி இன்று 50,000 பேரை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாக மத்தும பண்டார ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். எழுச்சி போராட்டம் 2022 இல் எழுச்சிக்கு முன்னோடியாக ஐக்கிய மக்கள் சக்தியே இருந்தது. இம்முறையும் அந்த எழுச்சிக்கு ஆரம்பத்தை...
    தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்த் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனநாயகத்தை பேண வேண்டும் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனநாயகம் என்பது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்.மக்களிடமும் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இருக்க வேண்டும்....
  350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முற்றுகைப் போராட்டம் நேற்று (29.1.2024) இரவு நடைபெற்றுள்ளது. பிரதான வீதி முற்றாக தடை இதன்போது மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு போராட்டத்தைக் கலைத்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக...
  இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (29.01.2024)சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ நடவடிக்கைகள் அதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார். ஜெனரல் தயா ரத்நாயக்க, 35 வருடங்களுக்கும்...
  தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த வீதி ஒன்று வவுனியா நகரசபையால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் இ.தயாபரன் தெரிவித்துள்ளார். வவுனியா, திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க வீதியின் இரண்டாம் ஒழுங்கையின் ஒரு பகுதி தனிநபர் ஒருவரினால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வழிமறிக்கப்பட்டு கொட்டகை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. வழக்கு தாக்கல் இது தொடர்பாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நகரசபையின் செயலாளரால் குறித்த தனிநபருக்கு அறிவித்தல்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (29.1.2024) ரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 23மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குற்றத்திற்கு தலைமை விசாரணைகளின் போது, ​​குற்றத்திற்கு...
இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,கனமழையால் பாரிய அளவில் மரக்கறி பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும். மரக்கறி விலை சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை...
  ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்வதாக லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு மோசடி செய்த குற்றச் செயல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை சந்தேகநபர் பன்னிபிட்டிய, ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடையவர் ஆவார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  4 வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது, உலகில் இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமாதாரிகள் இருப்பதாக...
  காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார். காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் காரியாலயங்களையும், காலி கோட்டைக்கு வெளியே கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருவது தொடர்பிலும் கவனம் செலுத்திய அதிபர், அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் காலி...