அருண் விஜய் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே. இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரம் இயல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படம் முதல் சில நாட்களில் குறைந்த திரையரங்களில் வெளியிடப்பட்டது. பின் மக்களிடம் இருந்து பேராதரவை பெற்ற மிஷன் திரைப்படத்திற்கு கூடுதல்...
  சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர். அது ஒரு பழமையான சுரங்கப்பாதை என்றாலும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று இன்றுவரை அறியப்படாததால் அது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக...
  பிரான்ஸில் உள்ள மோனாலிசா ஓவியத்தின் மீது மர்ம நபர்கள் கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சூப்பை கொண்டு சேதப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியத்தின் மீது உணவுப் பாதுகாப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பிய இரண்டு எதிர்ப்பாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு துளைக்காத கண்ணாடி கவரால் பாதுகாக்கப்பட்டதால் ஓவியத்தை சேதப்படுத்த முடியவில்லை என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் உலகில்...
  கனடாவில் பாடசாலை பஸ் சாரதியொருவர் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை நிர்க்கதியாக்கி, குறித்த சாரதி தப்பிச் சென்றுள்ளார். நயகராவின் வெல்லென்ட் பகுதியின் சார்ளஸ் ட்ரைவ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தினால் பஸ்ஸின் ஒரு டயர் கழன்றிருந்தது எனவும், நான்கு பிள்ளைகள் பஸ்ஸில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பஸ்ஸின் சாரதி...
  கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஏரோட்ரோமில் இலகுரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தும் பலனளிக்காமல் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமானமும் காரும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்தனர். காரில் இருந்தவர், சிகெரட் புகைப்பதற்காக காரை விட்டு இறங்கிய சமயத்தில் இந்த...
  பிரேசில் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் 592 கிலோமீட்டர் (368 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.  
  ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலிற்கு பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐ.நா அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன. உலகநாடுகளின் இந்த நடவடிக்கையை ஐ.நா அமைப்பு கண்டித்துள்ளது. உலகநாடுகளின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.யுஎன்ஆர்டபில்யூஏ என்பது பிரதானமாக காசாவிற்கான மனிதாபிமான அமைப்பு இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக...
  துருக்கிக்கு மீண்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. ட்ரோன் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து என்பன உள்வாங்கப்படுவதற்கு அண்மையில் துருக்கி இணக்கம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.இதன்படி விரைவில் துருக்கிக்கு கனடா ஆயுத ஏற்றுமதிகளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தற்போதைக்கு துருக்கிக்கான...
  கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில் மறதி நோயாளர்களின் 187 வீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதன்போது, எதிர்வரும் 26 ஆண்டுகளின் முடிவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 1.7 மில்லியனாக உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2020 ஆண்டில் கனடாவில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 6...
  சிரியா ஜோர்தான் எல்லையிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பிராந்தியத்தில் அமெரிக்க படையினர் கொல்லப்படுவது இதுவே முதல்தடவையாகும். ஈரான் ஆதரவு குழுக்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நாங்க்ள பதிலடிகொடுப்போம் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களை நாங்கள் தகுந்த தருணத்தில் உரிய விதத்தில் பொறுப்புக்கூறச்செய்வோம்...