நியுயோர்க்கில் பிஸ்கட் சாப்பிட்டு யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் திகதியன்று நியுயோர்க்கில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த ஒர்லா பாக்செண்டேல் என்பவரே பிஸ்கட் சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். ஒவ்வாமை 25 வயது நிறைந்த இவர் ஒரு தொழில்முறை நடனக்கலைஞராக இருந்துள்ளார், தனது வேலையின் நிமித்தம் நியுயோர்க்கில் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று பாக்செண்டேல்,...
  தமிழரசுக்கட்சியின் மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகமே சட்ட ரீதியாக இயங்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலையில்நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே கட்சியின் மாநாட்டுக்கான ஆலோசனைக்கூட்டமாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுமந்திரன் அவர்களை...
  மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (28.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸ் விசாரணை குடும்பத்தினருடன் கடலில் குழித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பமாக ஆண், பெண் என சுமார் 15 பேர்வரையில் குறித்த கடற்பகுதியில்...
  செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று இரவு (28.01.2024) இடம்பெற்றுள்ளது. வான் ஒன்றும் லாறியொன்றும் மோதியே விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலதிக விசாரணை இந்த விபத்தில் வேனில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த நபர் வானில் பயணித்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதோடு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்று (28.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்கிஸ்ஸை , படோவிட பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷா எனும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை பொரலஸ்கமுவை பிரதேசத்தில் வைத்து பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான...
  சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கல்வி பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பகிடிவதை தொடர்பில் கடந்த 14ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...
  சொத்து பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, அண்மையில் இயற்றப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை புதிய சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், ஜனாதிபதி, பிரதமர்,அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் மற்றும் ஊடகத் தலைவர்கள் அடங்கிய சுமார் 150,000 பேர், வருடாந்தம் விரிவான சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க...
  இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குற்றஞ்சாட்டி உள்ளார். நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலான உண்மைகளை மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது வெளிப்படுத்தி உள்ளார். திவால் பிரகடனம் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு நடந்தது...
வாக்கெடுப்பின் மூலமாகத்தான் பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இன்று (28.01.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "பொதுச் செயலாளர் தெரிவின் போது வாக்களிப்புக்கு அழைக்கப்படாதவர்கள், அங்கு உணவு பரிமாறியவர்கள் உள்ளிட்டோரும் இருந்துள்ளார்கள். ஆகவே...
  பதவி தெரிவுகள் குறித்து நீதிமன்றத்தை நாடுவதாக, தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை, சுமந்திரன் பகிரங்கமாக மிரட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் நீதிமன்றம் சட்ட ஒழுங்குகளுக்காக உள்ளது. தமிழரசு கட்சியில் பலர் உள்ளனர். இந்நிலையில் சில வழக்குகளில் வெற்றி பெற்றதால்.கட்சி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் நீதிமன்றத்தை நாடுவதாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சுமந்திரன்...