மாவனல்லை நகரின் பிரதான வீதியில் அமைந்திருந்த சுமார் 30 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி, பலத்த சேதமடைந்துள்ளன. சேதங்கள் தீப் பரவலை தடுக்க பிரதேசவாசிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், ஒருகட்டத்தில் பொலிஸாரும் அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர். எனினும் தீவிபத்தின் வீரியம் காரணமாக சுமார் 30 வரையான கடைகள் வரை தீ பரவி சேதம் ஏற்பட்டிருந்தது. கடையொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மாவனல்லை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
  தமிழரசு கட்சியின் 17 மாநாடு தலைவர் சத்தியப்பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு நடந்தது என்ன? இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் தெரிவு முறைகேடான து என்று கூறப்படுகிறது உண்மைதானா இன்று இடம் பெற்ற தமிழரசின் பொதுக்கூட்டத்தில் மத்தியகுழுவால் பிரேரிக்கப்பட்ட பதவி நிலைகள் தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்று பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிரகாரம் பொதுச் செயலாளராக - சண்முகம் குகதாசன் சிரேஷ்ட உபதலைவராக. -...
  தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்படி குகதாசனுக்கு 113 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வங்கிகளில் போலி தங்கத்தை அடகு வைத்ததற்காக 19 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர், பிக்கு போர்வையில் வாழ்ந்து வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளை பகுதியிலுள்ள தியான நிலையம் ஒன்றில் பிக்குவாக போன்று வாழ்ந்த வந்த நிலையிலேயே அவர் கைதானார். 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் வங்கி ஒன்றின் 24 கிளைகளில் தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க ஆபரணங்களை தயாரித்து...
  தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் கடும் குழப்ப நிலை நிலவுவதாகவும், பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வாக்கெடுப்பு கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள் புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே சிவஞானம், இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி. துணைத் தலைவர்கள்...
நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். 50 வயதான கேலிச்சித்திர செய்தியாளரும் இணையத்தளத்தின் கட்டுரையாளருமான பிரகீத், 2010ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியன்று கடத்தப்பட்டார் இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பிரகீத்தை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என கண்டறியப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு கோட்டாபய ராஜபக்ச, 2019 நவம்பரில் அதிபராக...
  தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடீரென இன்று மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுகின்றமை பேசுபொருளாகியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய குழுக் கூட்டத்தை இன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு நேற்றிரவு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின்...
  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். ஹைதராபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. ஸாக் கிராவ்லே, பென் டக்கெட் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்தது. அஸ்வின் ஓவரில் 35 ஓட்டங்கள் எடுத்திருந்த டக்கெட் LBW முறையில்...
  அஸ்வின், ஜடேஜாவின் மாயாஜால சுழலில் இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மாயஜால சுழற்பந்துவீச்சு ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்கத்திலே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக, ஜோ ரூட்டின் விக்கெட்டுக்கு பின் அடுத்தடுத்து இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சரிந்தன. ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டம் அக்சர் படேலும் ஒருபுறம் சுழற்பந்து வீச்சில் மிரட்ட, கேப்டன் பென் ஸ்டோக்ஸ்...
  இரண்டு வீரர்களுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (Zimbabwe Cricket) தடை விதித்துள்ளது. ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் ஆல்ரவுண்டர்கள் Wessly Madhevere மற்றும் Brandon Mavuta ஆகியோருக்கு நான்கு மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் மூன்று மாத சம்பளத்தில் பாதி குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஜனவரி முதல் அமலுக்கு வரும் என வாரியம் தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய மற்றொரு வீரரான Kevin Kasuza ஏற்கனவே அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம்...