உலகின் முதல் ‘நைதரசன் வாயு’ மரண தண்டனையை அமெரிக்க நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி சார்லஸ் சென்னட் – எலிசபெத் சென்னட். சார்லஸ் சென்னட் தன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகிய இருவரிடமும் தலா 1000 டொலர் வழங்கி, தன் மனைவியைக் கொலை செய்ய கேட்டிருக்கிறார். இருவரும், 1988 ஆம் ஆண்டு எலிசபெத் சென்னட்டை கொலை...
வெளிநாடொன்றில் 3 வாரத்தில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்
Thinappuyal News -
பாகிஸ்தான் - பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 3 வார காலத்தில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.
கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிம்மோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி அவதியுற்று வந்ததாக பஞ்சாப் அரசு தெரிவித்து இருக்கிறது.
கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் அதிகாலை இறைவணக்க...
ஜார்ஜியாவை சேர்ந்த ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறக்கும்போதே பிரிந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் டிக்டாக் செயலியின் மூலம் மீண்டும் அவர்கள் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை சர்தானியா என்று கருதிய அவரது நண்பர் ஆர்வத்தின் காரணமாக புதிதாக சாயம் பூசப்பட்ட நீல நிற முடியை பற்றி விசாரித்தார். அப்போதுதான் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சர்தானியா இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் குறித்த...
இஸ்ரேல் காசாவில் மேற்கொள்ளும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் நேற்றையதினம் (26-01-2024) தீர்பளித்துள்ளது.
பலஸ்தீனர்கள் இனப் பேரழிவு நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று...
ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் : ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
Thinappuyal News -
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
காயங்கள் குறித்த தகவல்கள்...
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டன் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது சிகிச்சைக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (26-01-2024) காலை வைத்தியசாலையில் தனது மருமகளை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மன்னர் குறைந்தது ஒரு இரவாவது வைத்தியசாலையில் இருப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை...
காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது, நேற்று (2024.01.26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் நேற்று இஸ்ரேலுக்கு தீர்ப்பளித்துள்ளது.
அத்தோடு, பலஸ்தீனர்களுக்கு இனப் பேரழிவு நடவடிக்கைகளின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும்...
கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் விழுந்த 10,000 டொலர்… இதுவரையில் உரிமை கோரவில்லை!
Thinappuyal News -
கனடாவில் பத்தாயிரம் டொலர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதியுடன் காலாவதியாகின்றது.
14, 15, 25, 36, 42 மற்றும் 43 என்ற பரிசு இலக்கங்களையும் 9 என்ற போனஸ் இலக்கத்தையும் கொண்ட லொத்தர் சீட்டே இவ்வாறு உரிமை கோரப்படாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
LOTTARIO என்ற லொத்தர் சீட்டிலுப்பின் மூலம் இந்த பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
சரியான நபர்களுக்கு...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் டிரம்ப் , நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு
பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 10 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம்...
டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் கடைச்சூழலினை வைத்திருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தினை தனது ஊடக அறிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோய் பரவல்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரவினர், யாழ். மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை...