சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது இன்று (26.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சிக்கியவர்கள் அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வானில் சுற்றுலா வந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
சுற்றுலாவை முடித்துக் கொண்டு அவிசாவளை நோக்கி வானில் திரும்பிச் சென்று வேளை, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தின் பின்னால் அவர்கள்...
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்றைய தினம்(26.01.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசரணை
சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி தனது வீட்டில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தொங்கியநிலையில் அவர் மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை...
நிகாவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் காட்டுயானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
குறித்த யானையின் சடலமானது நேற்று அதிகாலை நிகாவரெட்டிய - திவுல்லேவ திகன்னேவ பகுதியில் வைத்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த காட்டு யானை
இதன்போது உயிரிழந்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்குண்ட உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30...
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
துகள் உறைபனி
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில்...
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்ட தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உணவிற்கான தொகையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சில் நிதியமைச்சின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கல்வி அமைச்சு வட்டாரங்கள்
பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் எண்பத்தைந்து ரூபாவை நூற்றி பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி உள்ளது.
அத்துடன், ஒரு...
உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
இச்சம்பவம் தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பாளர், மண்டப பணியாளர் மற்றும் ஆசிரியர் ஒருவர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு...
குருணாகலில் இன்று காலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவை தொடர்ந்து இன்றைய தினம் 11 மணியளவில் திருகோணமலையில் வைத்து ஏனைய தெரிவுகள் நடைபெறவுள்ளன.
தலைவர் தெரிவின் போது பொது சபையில் பங்குபற்றியவர்களே இன்றைய நிகழ்விலும் பங்குபற்றுவார்கள்.
மத்திய...
மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு முன்மொழிந்துள்ளதாக அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், எனினும் சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மாற்றுப் பெயரை பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிமல் லான்சா கூட்டணி
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி,...