பாடசாலை மாணவனின் மர்மமான மரணம் தொடர்பில் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது. விசாரணை குழு நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் உள்ளிட்ட இதர தரப்பினரால் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த மத்ரஸா தொடர்பில் அக்குழு துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த விசாரணையை முன்னெடுக்கும் குழுவில் அம்பாறை மாவட்ட செயலகத்தின்...
  அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்(26 வயது) மரணம் தொடர்பில் நேற்று (24.01.2024) உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் இதன்போது ஊசி மூலம் அதிகளவு போதை மருந்து ஏற்றியமையே இளைஞனின் மரணத்துக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, உயிரிழந்த இளைஞரின் உடலில் போதை ஊசி மருந்து ஏற்றிய...
  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் நேற்று (24.01.2024) கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாழி ஒருவரின் வலையில் சிக்குண்ட நிலையில் இரு குண்டுகளும் காணப்பட்டுள்ளன. குண்டு செயலிழப்பு இதனை அவதானித்த குறித்த கடற்றொழிலாழி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் இரு குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இரண்டு குண்டுகளும் 9 அங்குலம் கொண்டவை...
  சனத் நிஷாந்தவுக்கு ஏற்பட்ட விபத்துக்கு சற்றுமுன்னர் தனது முகநூலில் காணொளி பதிவொன்றை இட்டுள்ளார். அதில் "வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்." - என அந்த காணொளி பதிவு அமைந்துள்ளது. இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் குறித்த பதிவை இட்டுள்ளார். 2 மணியளவில் விபத்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்...
  ஆனமடுவ, நவகத்தேகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது விபத்தில் ஒரே குடும்பத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை லபுகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த தாய் புத்தளம் வைத்தியசாலையின்...
  சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் பேரதிர்ச்சியளிப்பதாகவும் ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதியாக மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்த அவரின் மரணம் பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும், அவரின் மெய்பாதுகாவலரும் உயிரிழந்துவிட்டனர் என்ற செய்தியை...
  சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். அதற்கமைய, ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர அந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளார். பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார். ஆசனத்தை இழக்கும் அரசாங்கம் அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  தொடம்கஸ்லந்த உடத்தாபொல புராதன விகாரையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விகாரை பீடாதிபதி கல்னாவே தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதியில் வேறு இடத்தில் தேரர் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  சனத் நிஷாந்தவை ஏற்றிச் சென்ற SUV வாகனம் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியுள்ளது. இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். நெடுஞ்சாலையில் விபத்து அந்த அறிக்கையில் இன்று அதிகாலை கந்தான பொலிஸ் பிரிவின் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...
  அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர். கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப், முன்னால் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி...