விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். ராஜாங்க அமைச்சரின் கொழும்பில் இல்லத்திற்கே ஜனாதிபதி சென்றுள்ளார். ராகம வைத்தியசாலை இதேவேளை சனத் நிஷங்கவின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்து பெருமளவு அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. குறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். பெருமளவு அரசியல்வாதிகள் இந்நிலையில், உயிரிழந்த சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (25.1.2024) மாலை...
  அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு...
சீனாவின், ஜியாங்சி மாகாணம் - யுஷூயி நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று (24) இந்த வணிக வளாகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஏரளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்திய நேரப்படி பிற்பகல் 3.24 மணிக்கு வணிக வளாகத்தில் திடீரென தீப்பிடித்தது. கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வணிக...
பிக்பாஷ் லீக் தொடரின் 13 ஆவது சீசன் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7 ஆம் திகதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (24) சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ஓட்டங்களையும், ரென்ஷா 40 ஓட்டங்களையும்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். 1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சிலாபத்தில் பிறந்த சனத் நிஷாந்த பெரேராவிற்கு ஒரு மூத்த சகோதரியும் மூன்று சகோதரர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒரு சகோதரர் தற்போது இறந்துவிட்டார். சனத் நிஷாந்த சிலாபம் சென். மேரி ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர். 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா...
நூருல் ஹுதா உமர்  இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆரம்ப உரையாற்றிய இம்மாநாட்டில், தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவரும் றுகுணு...
நூருல் ஹுதா உமர்  கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் க.பொ.த. (சா/தர) மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம் புதன்கிழமை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையிலான கல்வி அதிகாரிகள் குழுவினரின் பங்கேற்புடன் நடைபெற்றது. விஷேட பாடசாலைத் தரிசிப்பில் ஈடுபட்டு பலதரப்பட்ட விடயங்களை அவதானித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள்  பாடசாலையின் பெளதீக வள அபிவிருத்திக்காக...
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த உட்பட இருவர்  உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி  இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதியுள்ளது. பின்னர், பாதுகாப்பு வேலியில் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில்...
  கற்பிட்டி மாம்புரி கடல் பகுதியில் பெருமளவான பீடி இலைகள் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினம் (23) இரவு கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கற்பிட்டி, மாம்புரி கடல் பகுதியில் வைத்து சுமார் 520 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள் இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெறும் கடத்தல் போன்ற...