கனடாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின், பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விபத்து தொடர்பிலான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. மேலும், சுற்றுலா நிறுவனமொன்றின் ஹெலிகொப்டரில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
  அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உள்ளன. அந்நாட்டு அதிபராக ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். மாகாணங்களில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க தனித்தனியே தேர்தல் இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம்...
  பிரிட்டன் வரும் சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரதமா் ரிஷி சுனக் மசோதாவுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுள்ளது. பிரிட்டனுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான அரசை வலியுறுத்தும் தீா்மானம் அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டது. பிரபுக்கள் சபையில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில், தீா்மானத்துக்கு ஆதரவாக 214 பேரும், எதிராக 171 பேரும் வாக்களித்தனா். இந்தத்...
  காஸாவின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை இஸ்ரேல் இராணுவம் சுற்றிவளைத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கான் யூனிஸ் நகரை இஸ்ரேப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதுவரை 25,490 பேர் உயிரிழப்பு காஸாவுக்குள் மேலும் முன்னேறிச் செல்வதற்கான இராணுவ நடவடியின் ஒரு பகுதியாக, இந்நகரம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த குறித்த பகுதியில் ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும்...
  கனடாவில் சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தை தேடும் பணி இந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்துடனான தொடர்பு துண்டானது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி...
  சிறைச்சாலை கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த கைதி முதலையால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது பெரும் முயற்சியை அடுத்துக் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரம் சிறைச்சாலையின் திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய தமிழ்க் கைதி ஒருவரே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சத்திர சிகிச்சை இதற்கமைய சிறைச்சாலைப் பகுதியில் உள்ள மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் மேற்படி கைதியும், இன்னும் சில கைதிகளும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தபோது...
  துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இராணுவத்திலிருந்து வெளியேறிய, இளைப்பாறியவர்களே பெரும்பாலும் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று(23.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம். இராணுவத்திலிருந்து பெரும்பான்மையானோரை வெளியில் அனுப்பும் போது அதற்குரிய சர்வதேச ரீதியான நடவடிக்ககைகளை எடுக்குமாறு ஏற்கனவே நான் அரசாங்கத்திற்கு கூறியிருந்தேன். இராணுவ வாழ்க்கையிலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறஅவர்கள் செய்ய வேண்டிய நடைமுறைகள் சர்வதேச ரீதியாக கூறப்பட்டுள்ளது. மற்ற...
  வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்காக விடுவிப்பதற்கான பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக 61 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார வளர்ச்சி ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கிராமியப் பொருளாதார...
  ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் பாரிய மின்கட்டண நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.​ நாடாளுமன்றத்தின் நேற்றைய தின (23.01.2024) அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் பாரிய மின்கட்டண நிலுவை இருப்பதாக மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் அண்மையில் குற்றம்...
  மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு செல்லும் பாடுமீன் நகர்சேர் கடுகதி தொடருந்திலுள்ள சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி சிற்றுண்டிச்சாலையில், உணவுப் பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை தற்காலிகமாக குறித்த சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23.01.2024) மட்டக்களப்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருத்த வேலைகள் மட்டக்களப்பு பிராந்திய...