ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதினாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். உடனடியாக தீர்வு இந்நிலையில் அரசாங்கத்தின் ஊடாக 3,000 உதவி ஆசிரியர்களை வெற்றிடங்களுக்கு நியமிக்க ஏற்பாடு...
  ஜனாதிபதி முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார். டலஸ் அழகப்பெரும தலைமையிலான அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயின் அதற்கு முன் 13 திருத்த சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பாரிய கிளர்ச்சி மேலும், இது...
  சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலைமை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் காணப்படும் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 290 வீதத்தினால் அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார் நாடு முழுவதிலும் கைதிகளை தடுத்து வைக்ககக் கூடிய மொத்த எண்ணிக்கை 11291 என்ற போதிலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 26176 என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியின் அடிப்படையிலான தகவல்களின் பிரகாரம் கைது...
  மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் பௌத்த பிக்கு மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். எரியூட்டப்பட்ட நிலையில் கார் இந்த சொகுசு கார் நேற்று(23.01.2024) கடுவெல-கொடல்ல என்ற இடத்தில் புதர்கள் நிறைந்த பகுதியில் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சந்தேகநபர்கள் வந்த வாகனத்தின் அதே உரிமத் தகடுடன் மற்றுமொரு வாகனம் பாணந்துறை எலுவில பகுதியிலுள்ள கேரேஜ் ஒன்றில்...
  அபே ஜனபல கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் ஊடாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிக்சூடு நடத்தியவர்கள் தென் மாகாணத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெலியத்த அதிவேக நுழைவாயிலுக்கு அருகில், துப்பாக்கிச்சூடு நடத்தி ஐவரை கொலை செய்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற காட்சிகள் அருகிலிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன. குற்றவாளிகளை...
  துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்களை, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார். யுக்திய நடவடிக்கை சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு ரொக்கப்பரிவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு...
  தனியார் துறை ஊழியர்களுக்கானஅடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழு கூடிய போது, ​​தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் ஊழியர் சம்பளம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000...
  யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துதானது கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு...
  சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் காரைநகர் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன் காரைநக இளம் தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் செயற்பட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கு பாராட்டு இதன்போது குறித்த இளைஞர்கள் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்டு , உற்பத்தி பொருட்களுடன் . ஒரு தொகை சட்ட விரோத மதுபானத்தையும் மீட்டு...
  போதைமாத்திரைகளை வைத்திருந்த 61 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் மாத்திரைகளை கடத்திய சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்திய நடவடிக்கையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் நேற்று (22) வெல்லம்பிட்டிய பொலிஸ் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே கொலன்னாவையைச் சேர்ந்த பெண் கைதாகியுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் , மேலதிக விசாரணைக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.