5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞன் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார். அந்த 5 பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம்...
  புதிய சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக குறைக்கப்படவுள்ளது. புலம்பெயர் மாணவர்கள் கனடா நாட்டின், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் பெரிதும் பங்காற்றி வந்துள்ளார்கள். ஆனால், அண்மைக்காலமாக கனடா நாட்டில் சர்வதேச மாணவர்களின் அதிகரித்துள்ள வருகையானது, கனேடிய அரசாங்கத்திற்கு பெரும் சவாளை...
  அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஜுலியட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு வீடுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரோமியோ நான்சி என்ற நபர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகின. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய ரோமியோ...
  பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாரம்மலவில் பொதுமகன் ஒருவர் சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''அண்மைக்காலமாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகள் குறித்து சுயாதீன விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். யுக்திய திட்டம் அதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
  சுதுமலைப் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. சுதுமலைப் பகுதுயில், கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆவர். இதன்படி, புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதாரப் பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலமையில் கிராம சேவேயாளர்கள் டெங்குத் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றில் வழக்குத்தாக்கல் அதன்படி, இதுவரை 23 பேருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் நுளம்புக்குடம்பிகள்...
  மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ். நீர்வேலி - மாசிவன் சந்தியில் இன்று(22.01.2024) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி மாசிவன்சந்தியூடாக மோட்டார் சைக்கிளில் இளைஞன் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
  பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த அரசியல்வாதியின் குருநாகல் இல்லம் பொலிஸாரின் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன், ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக...
  உள்ளூராட்சி மன்றங்களின் தொடர்ச்சியான செலவினங்களைக் குறைப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் தினேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் 2024ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு கடன் நிதிச் சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சூரிய சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான அரசின் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை அளித்து,...
  தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசி சிம் அட்டையை அவரது மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கை அரசாங்கத்தின் நிபுணர் அறிக்கை கிடைத்த பின்னர் பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல தெரிவித்துள்ளார். கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இதற்கமைய,...
  ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களின் கருத்து என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நியமிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 70% ஆக இருந்த பணவீக்கம் 5% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கான சேவை மேலும், தற்போதைய ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்காதவர் தாம் ஒருவரே எனவும்...