பௌத்தத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிக்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Thinappuyal News -0
சர்ச்சைக்குரிய காவி அங்கி அணிந்த துறவி இராமண்ண மகா நிகாயா துறவறத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தை இலங்கை இராமண்ண மகா நிகாய மகாநாயக்க தேரர் வண.மகுலேவே விமலபிதான தேரர் பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.
தீர்மானம்
இலங்கை இராமண்ண மகா நிகாயாவின் சங்க சபை குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.
இலங்கை ராமண்ணா மகா நிகாயாவின் காரக மகா சங்க சபை 15 டிசம்பர் 2023 அன்று சர்ச்சைக்குரிய துறவியை இராமண்ண...
குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து இன்று (23.1.2024) காலை 6.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்துகள் மோதி விபத்து
விபத்தில் பலரும் காயமடைந்துள்ளதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிரேஷ்ட புற்று நோய் வைத்தியர் கிரிஷாந்த பெரேராவுக்கு, சிற்றூழியரான பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த 18ஆம் திகதி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு
அதேவேளை, வைத்தியரும் தான் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்ததையடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், நேற்றைய தினம் (23.01.2024) காலி...
16,146 பேருக்கு ஜனவரி முதல் விசேட உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனவரி முதல் மாவட்டச் செயலாளர்கள் மூலம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதவித்தொகை
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் தளத்தில் மேற்கொண்ட பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரிவெனா, குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை...
மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார்.
பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம் முற்றியதில் சந்தேகநபரான மூத்த சகோதரர் கத்தரிக்கோலால் மற்ற நெஞ்சுப் பகுதியில் தாக்கியுள்ளார்.
சகோதரனுடன் வாக்குவாதம்
கத்திரிக்கோல் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவரும் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
59 வயதுடைய...
மோசடியில் ஈடுபட்ட சர்ச்சைக்குரிய ஆலையை இரண்டாவது நாளாக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது பல கணினிகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளை மேலும் காவலில் எடுப்பதற்கு முன், வளாகம் முழுவதும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
மோசடி
முன்னதாக மோசடியின் உரிமையாளரும் முதல் சந்தேகநபருமான சுதத் ஜானக பெர்னாண்டோ கடந்த 8ஆம் திகதியன்று அதிகாரிகளுடன் ஒத்துழைக்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில்,இரண்டாவது நாளாக...
ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும் ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது, எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 1.1 கிலோ மீற்றர் வீதி கார்பட் இடும் வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை (22.01.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கலந்து கொண்டு குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து விட்டு...
நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவர்
இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு...
இலங்கையை அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ! யார் இந்த சமன் பெரேரா ?
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நேற்று (21.01.2024) இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது 47 மேலதிக வாக்குகளினால் சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் சம்பந்தனை சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.