ஹெரோயினுடன் பிடிபட்ட 11 சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென் கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட இந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் 11 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீன்பிடி படகுகளில் 65 கிலோ 76 கிராம் போதைப்பொருள் காணப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை கடற்படையினர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம்...
தெஹியோவிட்ட, திகல பிரதேசத்தில் ஒருவர் கோடரி மற்றும் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் திகல, தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது சகோதரியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.
பின்னர், அவரது கணவர் வந்து கோடாரி மற்றும் கல்லால் குறித்த நபரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய கமராவின் உதவியுடன்
தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க நபர் இரகசிய கமராவின் உதவியுடன் இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துவிச்சக்கர வண்டிகள் மீட்பு
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து 6 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபரை...
இந்தவார தினப்புயல் பத்திரிகையைப் பார்வையிட...
thinappuyalnews-21.01.2024
கிண்ணியா வான் எல காவல்துறை பிரிவிட்குட்பட்ட செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யானை தாக்குதல் சம்பவமானது, நேற்று (21) மாலை இடம் பெற்றுள்ளது.
தற்போது நெற் செய்கை அறுவடை காலம் நெருங்கிய நிலையில் தனது விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக சென்றவரே யானை தாக்குதளுக்கு இலக்கியாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
வட்டமடு,ஆயிலியடி எனும்...
பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் போர்னேமௌத் அணியை வீழ்த்தியது.
முதல் பாதி
புள்ளிப்பட்டியில் 12வது இடத்தில் உள்ள போர்னேமௌத் (Bournemouth) அணி, முதலிடத்தில் உள்ள லிவர்பூல் (Liverpool) அணியை எதிர்கொண்டது.
Vitality மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் பாதி கோல்கள் இன்றி 0-0 என முடிந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணியின் வீரர்கள் மிரட்டினர்.
கோல்கள்
49வது நிமிடத்தில் அந்த அணியின் Darwin Nunez விரைவாக...
மூன்றாவது திருமணம் ஆன சில மணி நேரங்களிலேயே டி20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை சோயப் மாலிக் படைத்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் கடந்த இரண்டு நாட்களாக செய்திகளில் இருந்து வருகிறார்.
சோயப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்துவிட்டு, பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்தச் செய்தி சனிக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் திருமணமான...
International League டி20 தொடரில் பூரன் தலைமையிலான அணி, Gulf Giants அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.
பூரன் அரைசதம் விளாசல்
அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் MI Emirates அணி முதலில் ஆடியது. வில் ஸ்மீத் ஒரு ரன்னில் அவுட் ஆக, வசீம் 19 ஓட்டங்களில் முஜீப் ஓவரில் வெளியேறினார்.
பின்னர் நிதானமாக ஆடிய பிளெட்சர் 28 ஓட்டங்களில் இருந்தபோது ஓவெர்ட்டன் பந்துவீச்சில் ரிச்சர்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால்...
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பி கண்ணன் ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் சரவண விக்ரம்.
அந்த தொடர் முடியும் முன்பே விக்ரம் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக சென்றுவிட்டார். அவர் ஷோவில் சிறப்பாக எதுவும் செய்யவில்லை என ஆரம்பத்தில் இருந்தே விமர்சனம் எழுந்து வந்தது.
செட் ப்ராப்பர்டி என வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அவரை ட்ரோல் செய்தனர். இருப்பினும் 84 நாட்கள் வரை அவர்...
ரெய்டு அனுப்பிய மேக்னாவுக்கே ஷாக் கொடுத்த சரஸ்வதி.. தமிழும் சரஸ்வதியும் அடுத்த வார ப்ரோமோ
Thinappuyal News -
தமிழ் தனக்கு திருமணம் ஆனதை மறைத்துவிட்டதாக கோபத்தில் இருக்கும் மேக்னா தற்போது வில்லன் கேங் உடன் சேர்ந்துவிட்டார்.
தமிழின் பேக்டரியை சிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை அங்கு மறைத்து வைக்கிறார் அர்ஜுன்.
ஷாக் கொடுத்த சரஸ்வதி
ஆனால் தமிழின் கம்பெனிக்கு ரெய்டு சென்ற அதிகாரிகள் அங்கு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு செல்கிறார்கள். அதன் பின் சரஸ்வதி போன் செய்து மோக்னாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.
அந்த...