அஜித் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக அஜித் இணைந்து இருப்பதால், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அசர்பைஜானில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடக்கும் என சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் போன்ற நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். மேலும்...
பொங்கல் ரேஸில் போட்டியிட்ட படங்கள் அயலான் மற்றும் கேப்டன் மில்லர். இரு படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் குடும்ப ரசிகர்களை கவரும் என்றும், கேப்டன் மில்லர் இளைஞர்களுக்கு பிடிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், கேப்டன் மில்லர் மற்றும் அயலான் இரு திரைப்படங்கள் வெளிவந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 10 நாட்கள் வசூல் விவரம் அதன்படி, அருண் மாதேஸ்வரன்...
  விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்தது. ஆனால், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவிற்கு பின், டாப் 5ல் வந்துவிட்டது. எதிர்நீச்சல் சீரியலுக்கு சிறிய வீழ்ச்சி ஏற்பட்டு இருந்தாலும் கூட தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து கொண்டு இருக்கிறது. எதிராக மாறிய கதிர் ஆதி குணசேகரன்...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Greatest Of All Time எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும் என்பது போல் சொல்லப்படுகிறது. விஜய்யின்பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி Greatest Of All...
  இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் சமந்தா. இவர் தற்போது ஹிந்தியில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கிறார். ஆங்கில பதிப்பில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவ்வப்போது அந்த வெப் தொடர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா தகவல்கள் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடருக்காக தனி பயிற்சிகளை கூட சமந்தா...
  தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் நாயகியாக கலக்கியவர் விஜயசாந்தி. ஹீரோக்களுக்கு இணையான சண்டை காட்சிகளில் மிரட்டுவார். மேலும் டூப் போடாமல் ஸ்டண்ட் செய்வார் என பலராலும் கூறப்படுகிறது. தென்னிந்திய அளவில் இவர் பிரபலமான நட்சத்திரமாக இருந்தாலும் கூட தெலுங்கில் தான் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தெலுங்கில் வெளிவந்த மகேஷ் பாபுவின் Sarileru Neekevvaru படத்தில் நடித்திருந்தார். 2006ஆம் ஆண்டு வெளிவந்த Naayudamma படத்தில் நடித்திருந்த இவர், அதன்பின் கிட்டதட்ட 14 ஆண்டுகள்...
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை தமிழில் எந்த ஒரு பிக்பாஸ் வரலாற்றிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு நுழைந்து வெற்றியாளராகியுள்ளார். சீரியல் நடிகை அர்ச்சனா வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து அனைவருக்கும் சவால் கொடுக்கும் வகையில் விளையாடி இப்போது 7வது சீசனின் வெற்றியாளராகிவிட்டார். அவர் வெற்றிப்பெற்றதும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. சீரியல் நடிகை அர்ச்சனாவை போல் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்தவர் தான் தினேஷ்....
  விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என அதன்பின் கூறப்பட்டது. இதற்கு காரணம் என்னவென்றால், எப்போதுமே தனது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் தான் செல்லும் கல்யாண சுப நிகழ்வுகளுக்கு தனது மனைவி சங்கீதாவுடன் தான் நடிகர் விஜய் செல்வார். அதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால்,...
  வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை பிரபல சர்வதேச ஊடகமொன்று தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குறித்த ஊடகம் பதிவிட்டுள்ள காணொளியில், சீருடை அணிந்த அதிகாரிகள் சிறுவர்களைத் தண்டிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. வடகொரியாவில் தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தென்...
  ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தனை படக்ஷானில் உள்ள தலிபான்களின் தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், மற்றும் உயிர் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விபத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும்...