முட்டை இறக்குமதியில் ஊழல் நடைபெறுவது நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், முட்டை இறக்குமதியில் இலஞ்ச கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தார்.
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி...
மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 54 வீதம் வரை குறைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21.1.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மீன் விலை குறைந்ததால் மக்கள் காய்கறிகளை உண்பதில்லை அதனால் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
விலை உயர்ந்த மரக்கறிகள்
அவர் மேலும்...
மோசடி குழுக்கள் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தங்களை பொலிஸார் என கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மோசடி என அவர் கூறியுள்ளார்.
மர்ம அழைப்பு
தாங்கள் குற்றச்செயலுக்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும்,...
வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உணவு பாதுகாப்பு கொள்கைக்குழு இது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்குள் காய்கறிகளின் விலை குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளின் சந்தை விலை
மேலும் மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும்...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசி உபகரணக்கடையின் உரிமையாளரின் ஆசனத்தில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்த மிந்திக அளுத்கமகே என்ற 22 வயதுடைய இளைஞன் துரதிஷ்டவசமாக சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மிந்திக அளுத்கம என்ற இளைஞன் மூன்று சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவர் எனவும் மூத்த சகோதரர் விமானப்படை அதிகாரி எனவும் மற்றுமொரு சகோதரர்...
காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பொங்கல் தினத்தன்று Belal என்னும் சூறாவளி Mauritius தீவுகளை தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் சீரான காலநிலையே தொடரும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி ஏற்படும்...
மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த...
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வாழ்த்து
Thinappuyal News -
தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் அவர் இந்த வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
புதிய பாதையில் பயணிக்க வேண்டும்
அந்த பதிவில், நீண்ட நெடிய அரசியல் வரலாற்றினை கொண்ட எம் சமூகத்தின் பழம்பெரும் கட்சி ஒன்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தங்கள் பயணம், வெற்றுக்கோச சித்தாந்த அரசியலுக்கப்பால் தமிழ் மக்களின் நிலம், நிர்வாகம், உரிமை மற்றும் இருப்பு சார்ந்து...
வெள்ளவத்தை பகுதியில் பொலிஸார் குழுவொன்று அராஜகமான முறையில் இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.01.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் அராஜகம்
வெள்ளவத்தை பசல் பேட்ஸ் வீதிக்கு வந்த பொலிஸார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றும்படி உரிமையாளரான கோவில் பூசகரிடம் கோரியுள்ளனர். இதன்போது முறையற்ற வார்த்தைகளை பொலிஸார் பிரயோகித்துள்ளனர்.
இதன்போது அங்கு வந்த பூசகரின் மகன் பொலிஸாரிடம் இது தொடர்பில் வினவியமைக்கு, ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரிகள், அந்த இளைஞரை கொடூரமாக...
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிற்கு சபா குகதாஸ் வாழ்த்து
Thinappuyal News -
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிற்கு எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மீள் பரிசீலனை
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த உள்ளூராட்சி வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.
ஆனால் கட்சியின் அன்றைய முடிவை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி,கடந்த...