நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய 'ஸ்லிம்' எனும் லேண்டர் விண்கலம், நிலவில் தரையிறங்கியதாக, ஜப்பான்விண்வெளி மையம் நேற்று அறிவித்தது.
நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு செப்டம்பரில் 'ஸ்லிம்' எனும் லேண்டர் விண்கலத்தை ஏவியது.
நான்கு மாதங்களுக்கு மேலாக பயணித்த இந்த விண்கலம், இந்திய நேரப்படி நேற்று இரவு 8:50 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
700 கிலோ மட்டுமே எடை உடைய இந்த விண்கலம், துல்லிய தரையிறக்கம்...
பிரான்ஸின் புதிய பிரதமர் கேப்ரியல் அத்தால், நாள் ஒன்றில் நான்கு மணிநேரங்கள் மட்டுமே உறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் உடலநலத்தை கண்காணிக்கும் வல்லுனர்கள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேப்ரியல் அத்தால், பிரான்சின் இளம் பிரதமர் ஆவார்
நாட்டில் நிலவும் பல்வேறு இயற்கை அனர்த்தம் மற்றும் பல்வேறு காரணங்களுக்கான தொடர்ச்சியாக கடமையாற்றிவருகிறார்.
இரவு பகலாக பல பகுதிகளுக்கு பயணிப்பதும், பல சந்திப்புக்க்களில் ஈடுபடுவதுமாக அவரது பயணம் தொடர்கிறது.
இந்நிலையில்,...
வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை பிரபல சர்வதேச ஊடகமொன்று தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த ஊடகம் பதிவிட்டுள்ள காணொளியில், சீருடை அணிந்த அதிகாரிகள் சிறுவர்களைத் தண்டிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
வடகொரியாவில் தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் தென்...
தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவரை 3 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று நேற்று (18) மஹவ பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டப்போது சாரதியின் இருக்கைக்கு அருகில் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 143 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது சாரதி இருக்கைக்கு அருகாமையில் சிறிய...
பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று(19.01.2024) இடம்பெற்றுள்ளது.
மன்னார் - யாழ். பிரதான வீதியூடாக பயணித்த சிறிய ரக பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு குடும்பஸ்தர்கள்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது கோயில்...
பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று (19.1.2023) மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் விசாரணை
இந்நிலையில், இன்று காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம்...
பொதுச்செயலாளர் பதவி வாக்கெடுப்பில் ஞா. சிறிநேசனுக்கே தனது ஆதரவு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் எனவும், இதற்கு மாவட்ட தலைவர் என்ற அடிப்படையில் எவ்வித முடிவும் கிளை சார்பில் எடுக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(19.01.2024) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கும்...
அனுரகுமார முட்டாள்தனமான காரணங்களை கூறி வருவதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
விவாதமொன்றுக்கு வருமாறு விடுத்த பகிரங்க அழைப்பினை அனுர நிராகரித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் முட்டாள்தனமான கதைகளை பேசாது விவாதத்திற்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கத்தைக் கொண்ட ஒரே கட்சி தமது கட்சி என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை...
நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி அம்பலாங்கொடை தொடருந்து கடவைக்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றி இந்த வழக்கு நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டு, இறுதியாக நேற்று (19) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை நிறைவேற்றம்
இந்த...
தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து அவரிடமிருந்த தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
பொலிஸார் பாராட்டு
இதன்போது குறித்த வீதியால் மீரிகம நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர்களை தப்பிச்செல்லவிடாது வழிமறித்துள்ளார்.
இதனையடுத்து தப்பிச்சென்ற இருவரையும் முச்சக்கர...