பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நிறுத்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சியின் முக்கிய உறுப்பினர் என்ற வகையில், தமக்கு தெரிந்த வரையில், அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் நடத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி அனுபவமற்ற ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது எனவும்...
  இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பண்ணைகள் மூடப்படும் நிலை பண்ணைகளில் கால்நடைகள் திருட்டு போவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், விலங்குகள் திருட்டு காரணமாக சிறு பண்ணைகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோபா குழு தெரிவித்துள்ளது. மேலும்...
  அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்தார். இந்த செயற்பாடு தனிப்பட்ட ரீதியிலும் திணைக்களமும் எதிர்கொண்ட பாரிய அவமானம் என குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள...
  தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் ஒன்றரை பவுண் கொண்ட 130,000 ரூபா பெறுமதியான தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது. தங்க நகை திருட்டு அருகாமையில் உள்ள மத ஸ்தலத்தில் இருந்து வீடு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பெண்ணை...
  இலங்கையில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேங்காய் உற்பத்தி 1988.3 மில்லியன் தேங்காய்கள் ஆகும். இதன்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 151.3 மில்லியன் தேங்காய்களாக குறைந்துள்ளது. வீழ்ச்சிக்கான காரணம் இந்த நாட்களில் தேங்காய்...
  போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை இரவு நேரத்திலும் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபால கங்களில் மாத்திரம் இந்த கட்டணம் செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வெற்றியடைந்த முயற்சி தற்போது மேல் மாகாணத்தில் இரவு நேர தபாலகங்களில் அபராதப்பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி வெற்றியளித்ததையடுத்து, ஏனைய மாகாணங்களிலும் இதே நடவடிக்கைளை முன்னெடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுளளது. இம்மாத...
  கரட் விலை அதிகரித்தால் அதை விட்டு வேறு மரக்கறிகளை உண்ணுமாறு மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர அறிவுரை வழங்கியுள்ளார். நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கேரட் விலை அதேவேளை கரட் விலை சில தினங்களாக இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. , மரக்கறி விலைகள் வானமளவிற்கு உயர்ந்துள்ளதுடன்...
  ஒலுவில் வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரை தொலைக்காணொளி(Zoom) ஊடாக நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் நேற்று(19.01.2024) இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது கூறியுள்ளார். மறுசீரமைப்பு பணிகள் மேலும், வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு மறுசீரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலேயே மேற்படி தீர்மானத்துக்கு வந்ததாகவும் பதில் பதிவாளர்...
  மூன்றாம் நபர் காப்புறுதி கொண்ட வாகனம் மோதி விபத்துக்குள்ளானால் நீதிமன்றத்திற்கு செல்லாமல் அந்த நபருக்கு இழப்பீடு வழங்க போக்குவரத்து அமைச்சகத்துடன் காப்பீட்டு நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் இந்த விதிமுறைகளை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் முதலாம் திகதிக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள சுமார் நாற்பது காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னர்...
  சுமந்திரனின் தமிழ் இனத்தின் துரோகி சிறிதரன் தேசியப்பற்றாளர் மக்கள் இவ்வாறு கருதுகின்றனர் ஆய்வுகளம் சிரேஸ்ட ஊடகவியலாளர் திருமலை நவம்