பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) நண்பகல் 12மணியளவில் நடைபெற்றுகின்றது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு”...
  மக்கள் மத்தியில் மீண்டும் இனவாத கருத்துக்களை விதைக்க ராஜபக்ச ரெஜிமென்ட் தயாராகி வருகிறது. மக்கள் மத்தியில் இழந்துள்ள தமது செல்வாக்கை சரிசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர். இதற்கமைய கிராம மக்களை இலக்கு வைத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. தப்பான அபிப்பிராயங்கள் இதற்கான ஒழுங்குபடுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் தேர்தலை வெற்றிக் கொள்வது தமது இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மக்கள்...
  டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார். கொழும்பு அழகு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும்,ஹொரணை உயன பிரதேசத்தில் வசித்து வந்த ஹாஷினி பாக்யா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார். பிரேதப் பரிசோதனையில் வெளியான தகவல் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 5 ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 11ஆம் திகதி அதிதீவிர சிகிச்சைப்...
  துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துமிந்தவிற்கு பொது...
  கல்வி நலன் சார்ந்த பிரச்சனைகளையும் உடனடியாக தீர்க்க கோரி கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரப் பிரச்சினைகளை வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்படுகிறது. பேராசிரியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வேண்டும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு மஹாபொல மற்றும் ஏனைய சலுகைகள் உயர்த்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
  ‘அஸ்வெசும’ வேலை திட்டம் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாகவும், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். அஸ்வெசும உதவி பெறத்தகுதியிருந்தும், பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதுள்ளவர்கள் மற்றும் இதுவரை 45 சதவீதம் மட்டுமே பூர்த்தி உள்வாங்கபட்டும் இன்றளவும் பணம் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளவர்கள் பிரதேச செயலகத்துக்குச் சென்று மீண்டும் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். மீளவும் விண்ணப்பிக்க முடியும் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக...
முத்தையன்கட்டு இடதுகரை, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு, பொலிசாரால் விசாரணையின் நிமித்தமாக இன்பராசா ஆகிய எனது வீட்டில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்சி என்கிற பெயரில் இந்த நாட்டில் இயங்க முடியாது எனவும், தங்களுக்கு இக்கட்சி குறித்து இதுவரை காலமும் தெரியாது எனக்கூறி, இக் கட்சியின் தலைவரான க.இன்பராசா ஆகிய தன்னை பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்வதாக எமது செய்திச் சேவைக்கு தொடர்புகொண்டு அவர் தெரிவித்துள்ளார்.
  மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். பின்னர் போராட்டத்தின் இறுதியில் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பிழையான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் பண்ணையாளர்களின் 120 நாட்கள் போராட்டம் தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது, அது பற்றி தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன்...
  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு - மட்டக்குளிய, ரண்திய உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 'பட ரஞ்சி' அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகம் துஷ்யந்த் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் வழங்கியுள்ளனர். நிதி நிர்வாகி குறித்த நபர் போதைப்பொருள் விற்பனையாளரான 'புகுதுகண்ணா' என்பவரின் நிதி நிர்வாகியாக பணியாற்றியவர் என காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ''நேற்றிரவு 8.30...
  நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. நாடாளுமன்றத்தை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஒத்தி வைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியிலேயே, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். ஐந்தாவது சபை அமர்வு இதற்கமைய, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடாளுமன்ற சபை அமர்வை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான...